பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 24? தமது தலையில் இருந்த குல்லா வெகு துரத்திற்கப்பால் போய் விழும்படி தமது தலையை நிரம்பவும் வலுவாக அசைக்க, அவரது குல்லா விழுந்த இடத்தில் குல்லா மாத்திரம் இருந்ததே அன்றி பாம்பு காணப்படவில்லை. ஒட்டிலிருந்து அவருடைய தலையில் விழுந்த பாம்பு கழுத்தில் உள்ள சட்டை இடுக்கால் சட்டைக்குள் நுழைந்திருக்குமோ என்று எல்லோரும் எண்ணி, "சட்டையை உதறிப்பாரும்" என்றனர். உடனே கைதி மளமளவென்று தமது சட்டையைக் கழற்றி வெகு துரத்திற்கப்பால் எறிந்தார். பாம்பு உடம்பில் காணப்படவில்லை. ஜனங்கள், "நிஜாரை உதறிப் பாரும்" என்றனர். கைதி மெய்ம்மறந்து தத்தளித்து நிஜாரையும் உடனே கழற்றி அப்பால் எறிந்தார். உள்பக்கத்தில் இடுப்பில் பட்டுக்கரையுள்ள ஒரு வெள்ளை வஸ்திரம் காணப்பட்டது. ஆனால் பாம்பு எங்கும் அகப்படவில்லை. எல்லோரும் ஆச்சரிய வசத்தராய் ஸ்தம்பித்திருக்க, பாம்பு, பாம்பென்று கூச்சலிட்ட நமது ஜானிஜான் கான் சாயப்பு விரைவாகப் போய் சாட்சிக் கூண்டில் ஏறி நின்று, "நியாயாதிபதி அவர்களே! இந்த சட்டைநாத பிள்ளையை நான் தான் பிடித்துக் கொடுத்தவன். பதினையாயிரம் ரூபாய் பரிசு எனக்கே சேர வேண்டும். அதைக் கொடுக்க, உத்தரவு செய்யுங்கள்" என்றார். அதைக் கேட்ட ஜட்ஜூம் ஜனங்களும் முற்றிலும் பிரமிப் படைந்து அப்படியே ஸ்தம்பித்து கைதியின் முகத்தையும் ஜானி - ஜான் கானின் முகத்தையும் மாறி மாறி ஆவலோடு பார்த்த வண்ணம் பதுமைகள் போல இருந்தனர். ஜட்ஜ் துரை, "இவர் சட்டைநாத பிள்ளை என்று ருஜூ ஆகவில்லையே" என்றார். சாயப்பு, "இப்போது நான் தான் ருஜனப்படுத்தினேனே. இவருக்கு இங்கிலிஷ் பாஷை தெரியாதென்று இவர் தங்களிடம் கொஞ்ச நேரத்திற்கு முன் சொன்னாரே. அப்படி இருக்க, சட்டை நாத பிள்ளையின் தலையில் பாம்பென்று நான் இங்கிலீஷில் சொன்னவுடன் இவர் அதன் கருத்தை எப்படி உணர்ந்தார்? அதுவுமன்றி, சட்டைநாத பிள்ளையின் தலையில் பாம்பு என்று சொன்னவுடன், இவர் அதே கூடிணத்தில் தாமே சட்டைநாத பிள்ளை என்று உணர்ந்து தம்முடைய குல்லாவைத் தட்டி விட்டார் அல்லவா? இவர் சட்டைநாத பிள்ளையாய் இல்லா unr.sil. i.HI-15