பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 மாயா விநோதப் பரதேசி விட்டால், அவ்வளவு விரைவில் அதை உணர்ந்திருக்க மாட்டார் அல்லவா? அதுவுமன்றி, கொஞ்ச நேரத்திற்கு முன் இந்துவின் உடைதரிக்க மறுத்தவர் நிஜாருக்குள் பட்டுக்கரை வேஷ்டி அணிந்திருக்க வேண்டிய காரணம் என்ன? இவைகளைவிட இன்னும் வேறே திருப்திகரமான ருஜூ என்ன தேவை?" என்றார். அதைக் கேட்ட ஜட்ஜி துரை கட்டிலடங்கா வியப்பும் களிப்பும் அடைந்து தமது மூக்கில் விரலை வைத்து அப்படியே ஸ்தம்பித்து உட்கார்ந்து போனார். ஜனங்கள் எல்லோரும் ஆச்சரியத்தினாலும், சந்தோஷத்தினாலும் பெருத்த ஆரவாரம் செய்தனர். உடனே ஜட்ஜி துரை தமது தீர்மானத்தை எழுதிப் படித்தார். கமாலுதீன் சாயப்பு என்ற கைதி உண்மையில் சட்டைநாத பிள்ளைதானா என்ற விஷயத்தில் தமக்கு இருந்த சொற்ப சந்தேக மும், கடைசியில் ஜானிஜான் கான் சாயப்பு செய்த வேடிக்கை யான தந்திரத்தினால் முற்றிலும் நிவர்த்தியாகி விட்டதென்றும், கமாலுதீன் சாயப்பு என்பவர் உண்மையில் சட்டைநாத பிள்ளை தான் என்பது சந்தேகமற ருஜூவாகி விட்டதென்றும் ஜட்ஜி துரை அபிப்பிராயப்பட்டதன்றி, கமாலுதீன் சாயப்புவாக வேஷம் போட்டுக் கொண்டிருந்த சட்டைநாத பிள்ளை அதற்கு முன் அடைந்த தண்டனையில் பாக்கியிருந்த சுமார் எட்டு வருஷ காலத்தோடு, சிறைச்சாலையில் இருந்து தப்பித்து வந்து ஒளிந்து கொண்டிருந்த குற்றத்திற்காக ஆறுவருஷ காலம் சேர்த்து, பதினான்கு வருஷ காலம் அந்தமான் தீவில் தண்டனை அனுபவித் திருக்க வேண்டும் என்று ஜட்ஜ் துரை தீர்ப்புச் சொல்லியதோடு, அவர் ஒளிந்திருந்த ரகசியமான இடத்தைக் கண்டுபிடித்து, முடிவில், அவர் தான் சட்டைநாத பிள்ளை என்பதை மகா திறமையாக மெய்ப்பித்த ஜானிஜான் கான் சாயப்பு என்பவருக்குச் சேர வேண்டிய பதினையாயிரம் ரூபாய்ப் பரிசை அப்போதே கொடுத்துவிட வேண்டும் என்று தீர்ப்பு எழுதிப் படித்தார். அதைக் கேட்ட கைதிகளும், மாசிலாமணியும் அப்படியே இடிந்து உட்கார்ந்து போயினர். அங்குக் கூடியிருந்தவர்களில் பலர் மிகுந்த மகிழ்ச்சியும், மற்றவர் சட்டைநாத பிள்ளையின் விஷயத்தில் இரக்கமும் அனுதாபமும் வெளியிட்டனர்.