பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 மாயா விநோதப் பரதேசி இருந்தும் கும்பகோணத்தில் இருந்தும் வேறு பல சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். முடிவில் வக்கீல்கள் இருவரும் வெகு நேரம் வரையில் தத்தம் கட்சியின் வாதங்களை எடுத்துக் கூறி ஒருவரோ டொருவர் முஷ்டியுத்தம் செய்தனர். அவ்வளவோடு அன்றைய தினம் பகல் பொழுது முடிந்து போய்விட்ட தாகையால், ஜட்ஜி துரை தனது தீர்மானத்தை எழுதி மறுநாள் படிப்பதாகக் கூறிவிட்டு, அவ்வளவோடு கச்சேரியை நிறுத்தினார். வக்கீல்களும் மற்ற ஜனங்களும் எழுந்து வெளியில் சென்றனர். கைதிகள் அனைவரும் சிறைச்சாலைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டனர்.

  • + k

16-வது அதிகாரம் ஊடலில் தோற்றவரே கூடலில் வெல்பவர் பெண் வேஷத்தோடு எடுக்கப்பட்ட கந்தசாமியின் புகைப்படம் தபால் மூலமாய் மனோன்மணியம்மாளுக்குக் கிடைத்த செய்தியும் அதன் அடியில் குறிக்கப்பட்டிருந்த சந்தோஷச் செய்தியும், பட்டாபிராம பிள்ளை, வேலாயுதம் பிள்ளை, விருந்தினர் முதலிய எல்லோருக்கும் வெகு சீக்கிரத்தில் பரவி, அவர்கள் அனைவரும் அளவிட இயலாத ஆச்சரியமும் ஆனந்தமும் கொள்ளும்படி செய்தன. அன்றைய தினம் பூஜை நடந்த போது ஒரு ஸ்திரீ சன்னதங் கொண்டு தெரிவித்ததற் கிணங்க, உடனே அன்றைய தினமே நல்ல செய்தி வந்து சேர்ந்ததை எண்ணி எண்ணி எல்லோரும் பூரித்துப் புளகாங்கிதம் எய்தி, தங்களது விஷயத்தில் .கடவுள் கண்கூடாக வந்து உதவி செய்து காப்பாற்றுவதைக் கண்டு, மிகுந்த பக்திப் பெருக்கும், நன்றி விசுவாசமும் அடைந்து எல்லோரும் கடவுளைப் பலவாறு ஸ்தோத்திரம் செய்யத் தலைப்பட்டதன்றி, கந்தசாமியால் அனுப்பப்பட்ட படத்தை மனோன் மணியம்மாள் இடத்தில் இருந்து வருவித்து அதை ஒருவர் பின் ஒருவராய் ஆவலோடு வாங்கி வாங்கிப் பார்த்து, அவனது ஒப்புயர்வற்ற அற்புத வடிவத்தைக் கண்டு பிரமிப்பும் ஆச்சரியமும் பெருமகிழ்ச்சியும் அடைந்தவராய்க் குதுகலமாய் சம்பாவிக்கத் தலைப்பட்டனர். அதற்கு முன் வேலாயுதம்