பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 251 எப்பேர்ப்பட்ட கொடிய துஷ்டைகளின் மனதையும் ஒரு நொடியில் மாற்றி, அவர்களை நல்வழிப் படுத்தும் என்றால், அந்த மந்திரக் கோல் மனோன்மணியம்மாளை மாற்றியது ஒரு விந்தையா கடைசியில் எங்களுக்குக் கடவுள் நல்ல வழியைக் காட்டினார். இது போலவே எங்கள் கோரிக்கையைக் கடைசி வரையில் அவர் நிறைவேற்றி எங்களை உய்விக்க வேண்டும்" என்று தமக்குள்ளாகவே எண்ணி எண்ணி அந்தப் படத்தைத் தமது கையில் வெகுநேரம் வரையில் வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்து மனோன்மணியம்மாள் மறுபடியும் அதைப் பார்க்க ஆசைப்படுகிறாள் என்று வேலைக்காரி கேட்ட போதே அதை அவர் தமது கையை விட்டு விலக்கினார். கந்தசாமி நான்கு தினங்களில் வந்துவிடுவான் என்றும், அதுவரையில் எவரும் கவலையாவது விசனமாவது கொள்ள வேண்டாம் என்றும், சுவாமியின் வாக்கு உண்டான பிறகு வேலாயுதம் பிள்ளை முதலி யோரது பக்திப் பெருக்கும் பூஜைகளும் தானதருமங்களும் முன்னிலும் பதினாயிரம் மடங்கு அதிகரித்தன. கந்தசாமி எவ்வித இடருமின்றி கூேடிமமாய் எப்படியும் வந்து சேர்ந்து விடுவான் என்ற நம்பிக்கை எல்லோரது மனத்திலும் உண்டாகி விட்டது ஆனாலும், யார் அவனை அபகரித்துக் கொண்டுபோய் இருப்பார்கள் என்றும் அத்தனை நாள்கள் அவன் தங்களுக்கு எவ்விதத் தகவலும் சொல்லாமல் இருக்கும்படி அவனுக்கு எவ்விதமான இடுக்கண் நேர்ந்திருக்கும் என்றும், அவன் அந்த ஊரில் இருக்கிறானோ என்றும், அவன் எந்த நிமிஷத்தில் வருவானோ என்றும் அவர்கள் எல்லோரும் பலவித எண்ணங் களும் சந்தேகங்களும் கொண்டு ஆவலே வடிவாக மாறிப் போயிருந்தனர். அவர்களது மனம் போஜனத்தையாவது, தூக்கத் தையாவது சிறிதும் நாடாமலேயே இருந்து வந்தது. இவ்விடத்தில் நாம் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கூற வேண்டும். கந்தசாமியின் நண்பனான கோபாலசாமி என்பவன் ஆஸ்பத்திரியில் இருந்து நேராக கோமளேசுவரன் பேட்டையில் உள்ள தனது ஜாகைக்குப் போனதாயும், பட்டாபிராம பிள்ளையினது பங்களாவிற்கு வர அவன் வெட்கினான் என்றும், கண்ணப்பா அவனிடம் சென்று, அவனும்