பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 . - மாயா விநோதப் பரதேசி கந்தசாமியும் உருமாறி வந்த வரலாறு முழுதையும் கேட்டறிந்து கொண்டு வந்து வேலாயுதம் பிள்ளை முதலியோருக்குத் தெரிவித்தான் என்றும் நாம் முன்னரே சொன்னோம் அல்லவா? அதன் பிறகு இரண்டு மூன்று தினங்கள் கழிந்த பின், கோபால சாமியை எப்படியாவது வரவழைத்து அவனுடன் நேரில் பேச வேண்டும் என்ற விருப்பம் வேலாயுதம் பிள்ளை முதலியோருக்கு உண்டானதாகையால், அதற்கிணங்க, கண்ணப்பாவும், பட்டாபி ராம பிள்ளையும் மறுபடியும் அவனிடம் போய், அவனைப் பற்றி பங்களாவில் உள்ள எல்லோரும் மேன்மையான அபிப்பிராயமே கொண்டிருப்பதனால், அவன் அங்கே வருவதற்கு லஜ்ஜை அடைய வேண்டிய அவசியமே இல்லை என்று கூறி அவனது மனத்தைத் தெளிவித்து அவனை பங்களாவிற்கு அழைத்து வந்து சேர்த்தனர். அவ்வாறு வந்தவனுடன் நேரில் வேலாயுதம் பிள்ளை திரிபுரசுந்தரியம்மாள் முதலியோர் சம்பாஷித்து, கந்தசாமி மனோன் மணியம்மாளைக் கலியாணம் செய்து கொள்ளுவதில் எவ்வித மான மனப்பான்மையோடு இருந்தான் என்பதை உணர்ந்து கொண்டதன்றி, தாங்கள் அந்த ஊரில் இருக்கும் வரையில் அவனும் அந்த பங்களாவில் இருந்து பூஜை தான தருமங்களில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். ஆதலால், அவனும் அவ்வாறே அவர்களோடு இருந்து வந்தான். அவன் மனோன்மணி யம்மாளைப் பார்ப்பதற்கு வெட்கினான் ஆதலால், தான் அவளது திருஷ்டியில் படக்கூடாது என்ற தீர்மானத்தோடு அவன் அவ்விடத்தில் இருந்து வந்தான். ஆயினும், மனோன்மணி யம்மாள் தனது நடையுடை பாவனைகளில் முற்றிலும் மாறிப் போனதன்றி, கந்தசாமியை மணக்க ஆவல் கொண்டு அவனையே நினைத்து விரக வேதனைப்பட்டு, நோய் கொண்டு படுத்திருக்கி றாள் என்பது கோபாலசாமிக்குத் தெரிந்து போனதாகையால், அது பற்றி அவன் மிகுந்த களிப்பும் இரக்கமும் கொண்டு கந்தசாமி எப்போது திரும்பி வருவான் வருவான் என்று ஆவலே வடிவாக எதிர்பார்த்திருந்ததான். சனிக்கிழமை அன்று ஒரு பெண் பிள்ளை ஆவேசங்கொண்டு கந்தசாமியைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்த காலத்தில் அவனும் அந்தக் கும்பலில் இருந்து மற்றவர் களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்த ஆனந்தமும் பூரிப்பும்