பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 மாயா விநோதப் பரதேசி மாறிப் போயிருந்தனர். பங்களாவின் வாசலில் இருந்து உள்பக்கத்தில் யாராவது வந்தால், "பையன் வந்து விட்டானா?" என்ற கேள்வியையே உள்ளே இருந்தவர்கள் கேட்டனர். "இன்னமும் வரவில்லை" என்ற ஏக்கமான மறுமொழியே பிறந்து கொண்டிருந்தது. அவ்வாறு அன்றைய தினம் மாலை வரையில் கழிந்தது. வேலாயுதம் பிள்ளை முதலிய எல்லோரும் தண்ணி கூட அருந்த மனமற்றவராய்க் கந்தசாமி வரவில்லையே என்று நினைத்து நினைத்து ஏங்கிப் பைத்தியங் கொண்டவர்களைப் போல, வேறே எதிலும் நாட்டங் கொள்ளாதவர்களாய் இருந்து தத்தளித்துத் தவித்த வண்ணம் இருந்தனர். கோபாலசாமியின் நிலைமையோ விவரிக்க இயலாத பரம வேதனையானதாக இருந்தது. சனிக்கிழமை பெண் பிள்ளை ஆவேசங் கொண்டு சொன்ன வார்த்தைகளின் மேல் அவனுக்கு அவ்வளவாக நம்பிக்கை உண்டாகவில்லை ஆனாலும், அவனையும் மீறி அவனது மனம் அந்த நான்காவது தினத்தில் கந்தசாமியின் வருகையை எதிர்பார்த்த வண்ணம் தாமரை இலைத் தண்ணித் துளிபோலத் தவித்தபடி இருந்தது. மற்றவரைப் போல அவனும் அன்னந் தண்ணிர் முதலிய எதையும் நாடாமல் பிற்பகல் வெகுநேரம் வரையில் இருந்து பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். அவனுக்கு அந்த பங்களாவில் இருக்கையே கொள்ள வில்லை ஆதலால், அவன் அவ்விடத்தை விட்டு மாலை ஆறுமணி சமயத்திற்கு வெளியில் வந்து, அந்த பங்களாவில் வலது பக்கத்தில் இருந்த பிரம்மாண்டமான பூஞ்சோலைக்குள் நுழைந்தான். அது, ஆலவிருகூடிங்கள், தென்னை, கமுகு, வேறு பலவகைப் பட்ட பழமரங்கள் முதலியவை ஏராளமாக நிரம்பப்பெற்ற இடமாக இருந்தது. எங்கும் புஷ்டத் தொட்டிகளும், ஊஞ்சல் பலகைகளும், மருதாணி வேலிகளும், வாவிகளுமே மயமாய் நிறைந்து நிரம்பவும் ரமணியமாகவும், குளிர்ச்சியாகவும், நிழல் அடர்ந்ததாகவும் இருந்தது. காற்று ஜிலீர் ஜிலீர் என்று வீசி மனதையும் தேகத்தை யும் பரவசப்படுத்திக் கொண்டிருந்தது. அடிக்கடி ஏராளமான குயில்கள் நிரம்பவும் கனிவாகவும் மதுரமாகவும் கூவி இன்னொலி