பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 மாயா விநோதப் பரதேசி ஆசையோடும், ஆவலோடும் கட்டியணைத்து இறுகப்பிடித்துக் கொண்டான். அவனது மனம் காட்டாற்று வெள்ளம் போலப் பொங்கி எழுந்து ஆனந்தமாய் வழிந்தோடத் தொடங்கியது. தேகம் பரவசமடைந்து வெடவெடவென்று ஆடுகிறது. பாதாதிகேசம் வரையில் உரோமம் சிலிர்த்து ஆனந்த நிர்த்தனம் செய்கின்றது. மடை திறந்து விடப்பட்ட ஆறு போல அவனது கண்கள் இரண்டும் ஆனந்த பாஷ்பத்தைச் சொரிகின்றன. அவன் கட்டிலடங்கா ஆவலும், வாத்சல்யமும், மன நெகிழ்வும் கொண்டு, கந்தசாமியை விடாமல் மேன்மேலும் இறுகத் தழுவி, "அப்பா கந்தசாமி எத்தனை பேருடைய வயிற்றில் பாலை வார்த்தாயப்பா! ஆகா! உன்னைக் காணாமல் நாங்கள் எல்லோரும் படும்பாடு ஈசனுக்குத் தான் தெரியும். உன் தாய் தகப்பனார் முதலியோர் இந்தப் பதினைந்து தினங்களாய் பட்டினி கிடந்து, இறந்தவர் களிலும் சேராமல் உயிரோடிருப்பவர்களிலும் சேராமல் தவிக்கிறார் களப்பா அவர்கள் எல்லோரையும் விட மனோன்மணியம்மாளின் நிலைமை தான் வாயால் சொல்ல முடியாததாக இருக்கிறது! அப்பா! உன்னை நினைத்து நினைத்து அவள் அநேகமாய்த் தன்னுடைய பிராணன் முழுதையும் விட்டுவிட்டாளப்பா! நல்ல வேளையாக வந்தாயே!" என்று பிரலாபித்துக் கூற, அதற்கு மேல் பேசமாட்டாமல் அவனுடைய தொண்டை அடைத்துக் கொண்டது. அவனுடைய மூச்சுத் திணறுகிறது. அவன் GDGణు பேசமாட்டாதவனாய்க் கந்தசாமியை மேன்மேலும் இறுகத் தழுவியபடி ஊமை போல் அப்படியே ஒய்ந்து போய் இன்பமோ துன்பமோ என்பது தெரியாத மனநிலைமையில் நிற்க, அவனது நிகரற்ற வாஞ்சையைக் கண்டு அவனது உருக்கமான சொற்களைக் கேட்ட கந்தசாமியும் கட்டிலடங்கா மனவெழுச்சியும் ஆனந்தப் பெருக்கும் அடைந்து, கண்ணிரை ஆறாய் ஓடவிட்டுத் தேம்பித் தேம்பி அழுத வண்ணம் தழுதழுத்த குரலில் பேசத் தொடங்கி, "அப்பா கோபாலசாமி! உன்னைப் போன்ற சிநேகிதன் இந்த உலகத்தில் வேறே யாருக்காயினும் இருந்திருப்பானா; உண்மை யான பிரியமுள்ளவர்கள் யார் என்பதை ஆபத்துக் காலத்தில் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பார்கள். அதைப் போல நீ மகா உத்தமமான பரம மித்ரன் என்பதை நான் அறிந்து கொண்டேன்.