பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 259 புறப்பட்டு வருகிறேன். நான் இந்த பங்களாவிற்கு வருவதற்குள் இருட்டிப் போய்விடும் என்று நினைத்தேன். இன்னம் வெளிச்ச மாக இருக்கிறது. இப்படித் தோட்டத்திற்கு வெளியில் மறைந்திருக் கலாம் என்று நினைத்து வந்தேன். தோட்டத்து வேலியில் ஒரு வழி விடப்பட்டிருந்தது. அதன் வழியாக இந்தத் தோட்டத்திற்குள் வந்து, இங்கே கொஞ்ச நேரம் இருந்து, இப்படியே பங்களா விற்குள் போய், முதலில் உன்னைக் கண்டு பிறகு மற்றவரைக் காண நினைத்தேன். கும்பிடப்போன தெய்வம் குறுக்கிட்டது போல நீ இவ்விடத்திலேயே ஆஜராய் உட்கார்ந்திருந்தாய்! உன்னைப் பார்த்தவுடன், உண்மையில் நீதானா, அல்லது, என்னுடைய மனப்பிராந்தியோ என்றுகூட நான் நினைத்து விட்டேன்" என்றான். கோபாலசாமி:- உன்னைப் பார்த்தவுடன் நான் கூட அப்படித் தான் நினைத்துவிட்டேன். நாம் எப்போதும் எந்த விஷயத்திலும் ஒரே மாதிரியான அபிப்பிராயம் கொள்கிறவர்கள் அல்லவா. நானும் ஆஸ்பத்திரியில் இருந்து இங்கே வர லஜ்ஜைப்பட்டுக் கொண்டு கோமளேசுவரன் பேட்டைக்குப் போய்விட்டேன். பிறகு பட்டாபிராம பிள்ளையும், நம்முடைய கண்ணப்பாவும் வந்து என் சங்கோசத்தை விலக்கி என்னை அழைத்துக் கொண்டு வந்தார்கள். இது நம்முடைய மனசின் கெடுதலேயொழிய மற்றவர்கள் நம்மிடம் அந்த விஷயத்தைப் பற்றிப் பேசவே போகிறதில்லை. உன்னை எப்போது காண்போம் என்று எல்லோரும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நீ வந்தால், எல்லோரும் அப்படியே சந்தோஷத்தினால் பரவசமடைந்து குதிப்பார்களேயன்றி, பழைய சங்கதி எதையும் பேச மாட்டார்கள். ஆனாலும் உன்னுடைய பிரியப்படியே நாம் இன்னம் கொஞ்ச நேரம் பொறுத்துப் போகலாம். உன்னை அவர்கள் எங்கே கொண்டு போனார்கள்? என்ன செய்தார்கள்? இந்தப் பதினைந்து தினங்களாய் நீ எங்கே இருந்தாய்? உன்னைப் பற்றி எங்களுக் கெல்லாம் எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல் நீ இருந்த காரணம் என்ன? எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று என் மனம் பதறுகிறது.