பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 மாயா விநோதப் பரதேசி கந்தசாமி முற்றிலும் குழம்பிப் போய் உண்மையான அன்போடு, "கோபாலசாமி! உன்னிடம் நான் பொய் சொல்வதாக நீ நினைக்கிறாயா? இல்லையப்பனே நான் சொல்வது பிரமான மான சங்கதி. நான் அதை அனுப்பவே இல்லை. வேறே யார் அனுப்பினார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. அதுவுமன்றி, நான் பெண் வேஷத்தோடிருந்த தினங்களில், நான் பிரக்ஞை யோடு தான் இருந்தேன். யாரும் படம் பிடித்ததாகத் தெரிய வில்லை. எப்படித்தான் இந்த மாயப் படம் வந்ததோ என்பது கடவுளுக்குத் தான் தெரிய வேண்டும். நீங்கள் எல்லோரும் இங்கே இருந்து படும் பாட்டைக் கண்டு கடவுளே அந்தப் படத்தை சிருஷ்டித்து அனுப்பி இருக்கிறார் என்று தான் நாம் எண்ண வேண்டும்" என்று கூறினான். கோபாலசாமி முற்றிலும் குழம்பித் தடுமாற்றம் அடைந்தவனாய், "சரி அப்படியே இருக்கட்டும். தெய்வம் எப்போதும் மனிதர் மூலமாகவே தனது கருத்தை நிறைவேற்றும் என்பார்கள். அது போலவே, இதில் யாராவது மனிதரும் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். இருந்தாலும், இதன் அந்தரங்கம் மனிதருடைய மூளைக்கு எட்டாததாகத் தான் இருக்கிறது. விளக்கு வைத்தாய் விட்டது. உன் தகப்பனார் சிவபூஜை செய்து வருகிறார், இப்போது சாயங்கால வேளை தீபாராதனை செய்ய ஆரம்பிப்பார்கள். நாம் போவோம் வா" என்றான். உடனே கந்தசாமியும் கோபாலசாமியும் பூஞ்சோலையை விட்டு பங்களாவை நோக்கி நடக்கத் தலைப்பட்டனர். அப்போது கந்தசாமி, "அடேய் கோபாலசாமி! எனக்கு மற்றதெல்லாம் ஆச்சரியமாகத் தோன்றவில்லை. இந்தப் பெண்ணுக்கு நான் புருஷன் ஆகலாமா என்பதை நிச்சயிக்க வந்ததற்குள், நான் வேறு இரண்டு புருஷர்களுக்கு சம்சாரம் ஆக நேர்ந்ததை நினைக்க நினைக்க எனக்கு உண்டாகும் ஆச்சரியம் சொல்ல முடியவில்லை" என்றான். - கோபாலசாமி, "நாம் இப்படிப்பட்ட முடத்தனமான காரியம் செய்து விட்டோமே என்று முதலில் நான் எண்ணி நிரம்பவும் வேதனைப்பட்டேன். பின்னால் காரியங்கள் நடந்திருப்பதைப்