பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 277 பிரியப்படி அடிமையிலும் அடிமையாய் நடந்து கொள்வேன் என்று தெரிவித்ததாகவும் சொல்லி அனுப்பு. அக்கா! அக்கா! நான் பிறந்த பிறகு என் தாய் எப்படி இருப்பாள் என்று பார்த்ததே இல்லை. இப்போது நீதான் என் தாய். ஆகையால், நான் கூசாமல் என் மனசைத் திறந்து உன்னிடம் எல்லாவற்றையும் வெளியிட்டுப் பேசுகிறேன். இதைப்பற்றி என்னை நீ இளக்கார மாக நினைத்தாலும் பரவாயில்லை" என்று கூறித் தேம்பித் தேம்பி அழுதாள். அப்போது ஒரு வேலைக்காரி அங்கே தோன்றி, "அம்மா! தீபாராதனை நடக்கிறது; கூப்பிடுகிறார்கள்" என்றாள். மனோன்மணியம்மாளது பரிதாபகரமான சொற்களையும் நிலைமையையும் உணர்ந்த கந்தசாமிக்கு அதற்கு மேல் அவ்விடத்தில் நிற்க சிறிதும் சகியாமல் போய்விட்டது. அடக்க இயலாத அபாரமான ஒர் ஆவேசம் அவனது மனத்தில் குபிரென்று பொங்கி எழுந்தது. உடனே உள்ளே புகுந்து, தான் வந்துவிட்ட தாகவும், தனக்கு அவளிடம் சிறிதும் அருவருப்பென்பதே இல்லை என்றும் சொல்லிவிடலாமா என்ற ஓர் அவா எழுந்து அவனைத் துண்டியது. ஆயினும், தனது அண்ணியும், வேலைக் காரியும் இருக்கையில் தான் அங்கே போவது தவறான நடத்தை எனப்பட்டது. ஆகவே தான் அதற்கு மேல் எவ்விடத்திலும் நின்று காலஹரணம் செய்யாது, உடனே சென்று தனது மனிதர்களைப் பார்ப்பதே அதற்குத் தக்க பரிகாரம் என்றும், உடனே அந்தச் செய்தி மனோன்மணிக்கும் எட்டிவிடும் என்றும், அல்லது, அவளே, அதற்குள் அங்கே வந்துவிடுவாள் என்றும், தான் வந்து விட்ட செய்தியைக் கேட்டு அவள் உடனே தேறுதலடைவாள் என்றும் தீர்மானித்துக் கொண்டவனாய், அவன் சரேலென்று அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, சிறிது தூரத்திற்கப்பால் நின்ற கோபாலசாமியையும் அழைத்துக் கொண்டு விரைவாக உள்ளே செல்லத் தொடங்கினான். தனது தகப்பனார் முதலியோரது முகத்தில் தான் எப்படி விழிப்பது என்று அவன் அதற்கு முன் லஜ்ஜை அடைந்ததெல்லாம் போன இடத் தெரியாதபடி பறந்து போய்விட்டது. ஆகவே, அவன் கோபாலசாமியை அழைத்துக் கொண்டு பூஜை மண்டபத்தை நோக்கி விரைந்து வந்தான். பூஜை மண்டபமும், புஷ்பக விமானமும், பூஜைப் பெட்டியும்