பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273 மாயாவிநோதப் பரதேசி மல்லிகைப் புஷ்பமே மயமாக நிறைந்து, பார்வதி பரமேசுவரர்கள் கொலு வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி போல மகா அற்புதமான காட்சியாக விளங்கின. எங்கு பார்த்தாலும் மணி விளக்குகள் ஜெகஜ் ஜோதியாக நிறைந்திருந்தன. வேலாயுதம் பிள்ளையும், அவரைச் சேர்ந்த விருந்தினர், பட்டாபிராம பிள்ளை முதலிய சுமார் ஐம்பது ஜனங்கள் நன்றாக விபூதி பூசி, பக்திப் பெருக்கை ஒடவிட்ட தோற்றத்தினராய்க் கும்பிட்ட கையும் குனிந்த முகமுமாய் நின்றனர். அன்றைக்குள் கந்தசாமி வருவான் வருவான் என்று எல்லோரும் எதிர்பார்த்துப் பார்த்து ஏங்கித் தவித்து வாடிக் துவண்டு, அந்த நிலைமையில் ஈசுவரன் தான் தங்களுக்குள் வழி காட்டி உய்விக்க வேண்டும் என்ற உறுதியோடு அன்றைய மாலைப் பூஜையை நடத்திக் கொண்டிருந்தனர். வேலாயுதம் பிள்ளையின் உடம்பு அதற்கு முன் இருந்ததற்குக் கால் பங்காக இளைத்துப் போயிருந்தது. புத்திர சோகத்தினாலும், ஊணுறக்கம் இன்றியும் அவர் அவ்வாறு மெலிந்து பாகாய் இளகித் தமது முழு நம்பிக்கையையும் கடவுளின் மீது வைத்து, அவனன்றி ஓரணுவும் அசையாதென்றும், அவனது தாளே கதியென்று உறுதியாகப் பற்றினால், அவன் எப்படியும் மனிதர் மூலமாய்த் தமது கோரிக்கையை நிறைவேற்றி வைப்பான் என்றும் நினைத்து ஒரே உறுதியாக இருந்து, மற்ற நாட்களைவிட அன்று மிகமிக நைந்துருகி தீபாராதனைத் தட்டைக் கையில் ஏந்தி கற்பூரத்தைக் கொளுத்தி விட்டு அதைத் தூக்கி சுவாமிக்கெதிரில் காட்ட ஆரம்பித்தார். அவரது தேகம் தீபாராதனைத் தட்டைத் துக்கிப் பிடிக்கவும் வலுவற்றதாய் மெலிந்து போயிருந்தமையால், கைகள் வெட வெட வென்று நடுங்கின. உடம்பும் கால்களும் தள்ளாடின. அவரது சிலிர்த்தது. கண்கள் கண்ணித் துளிகளை உதிர்த்தன. அவர் தமது பக்திப் பெருக்கில் முற்றிலும் தம்மை மறந்து அடியில் வரும் பாக் களைக் கூறி வாய்விட்டுக் கதற ஆரம்பித்தார்: விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்து கிடந்தழுது விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன், அளக்கறியாத் துயர்க்கடலில் அழுந்தி நெடுங்காலம் . அலைந்தலைந்து மெலிந்து துரும்பதனின் மிகத் துரும்பேன்,