பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 279 கிளக்கறியாக் கொடுமையெல்லாம் கிளைத்த பழுமரத்தேன், கெடுமதியேன், கடுமையினேன், கிறிபேசும் வெறியேன், களக்கறியாப் புவியிடை நான் ஏன் பிறந்தேன் அந்தோ! கருணைநடத் தரசே! நின்கருத்தை அறியேனே! என்று பாடி நெக்கு நெக்குருகிக் கண்ணி மல்கிப் பேரின்ப நிலையில் தோய்ந்து ஆடியசைந்து நின்று தத்தளித்தபின் மறுபடியும் பாடத் துவக்கி: படமுடியா திணித்துயரம் படமுடியா தரசே பட்டதெல்லாம் போதுமிந்தப் பயந்தீர்த் தெப்பொழுதென் உடல் உயிர் ஆதியவெல்லாம் நீ எடுத்துக்கொண்டுன் உடலுயி ராதியவெல்லாம் உவந்தெனக்கே யளிப்பாய்? வடலூறு சிற்றம்பலத்தே வாழ்வாயென் கண்ணுள் ഥങ്ങഥേ! ബ് குருமணியே! மாணிக்க மணியே! நடன சிகாமணியே! நன் மணியே! பொன் மணியே! நடராஜ மணியே! நான் படும்பாடு, சிவனே! உலகர் நவிலும் பஞ்சு தான் படுமோ, சொல்லத்தான் படுமோ, எண்ணத்தான் படுமோ? கான் படு கண்ணியின் மான் படுமாறு கலங்கி நின்றேன்; ஏன் படுகின்றனை என்றிரங்காயெனில் என் செய்வனே. என்று பாடிப் பரவசமடைந்து மனதைப் பரப்பிரம்மத்தில் லயிக்க விடுத்து மெய்ம்மறந்து புளகித்து கண்களை மூடி ஆடியசைந்து கற்பூர ஆரத்தியும் கையுமாய் நிற்க, அதைக் கண்ட மற்ற எல்லா ஜனங்களும் கைகுவித்து, 'ஹரஹர ஹரஹர மகாதேவ சம்போ சம்போ சங்கரா கருணாநிதே" என்று கூறிக் கன்னங்களில் அடித்துக் கொண்டு கைகுவித்து மனம் நைந்து பாகாயுருகி ஓடிய வண்ணம் பக்திப் பெருக்கை ஆனந்த பாஷ்பமாய்க் கண்வழி ஒடவிட்டவராய் நிச்சப்தமாய் நிற்க, அந்த நிலைமையில் அவர்கள் எல்லோரது பக்திப் பெருக்கும், உருக்கமும், மனநெகிழ்வும், ஆவலும், வேதனையும் உச்சநிலையடைந்து நின்றன என்றே சொல்ல வேண்டும். அப்போது சிறிது தூரத்திற்கப்பால் யாரோ நிரம்பவும் பரபரப்பாய் தடதடவென்று ஓடிவந்த ஒசை கேட்டது. அதைக் கேட்டு அங்கிருந்தோர் அனைவரும் திடுக்கிட்டு மருண்டு அங்குமிங்கும் திரும்பிப் பார்த்தனர். அடுத்த கூடிணத்தில்,