பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 285 - என்று எழுதப்பட்டிருந்த விளம்பரத்தை பட்டாபிராம பிள்ளை படித்து முடித்தார். திகம்பரசாமியார் இறக்கவில்லை என்ற ரகசியம், அங்கே இருந்தோருள் முக்கியமான சிலருக்கு மாத்திரம் தெரிந்திருந் ததே யன்றி, மற்ற பெரும்பாலோருக்குத் தெரியாதிருந்தது. அதை அறிந்திருந்தவர்கள் அந்த விளம்பரத்தைப் படிக்கக் கேட்டு எவ்வித அபிப்பிராயமும் வெளியிடாமல் மெளனமாக இருந்தனர். மற்றவர் மிகுந்த வியப்போடு பேசத் தொடங்கி, "ஆகா! அந்த மகானைப் போன்ற அவதார புருஷர் இனி உலகத்திலும் அகப்படப் போகிறார்களா? அவருக்கும் அப்பேர்ப்பட்ட காலம் வந்ததே! ஆகா! அவருக்கு நிகரான மனிதர் அவரேயன்றி, வேறு யாரைச் சொல்ல முடியும்? அந்த வேலையை வகிக்கக்கூடியவர் இனி பிறக்க வேண்டும்" என்று அங்கலாய்ப்பாகக் கூறித் தமது விசனத்தை வெளியிட்டனர். அப்போது அந்த சமாசாரப் பத்திரிகையின் பக்கங்களை எல்லாம் தள்ளிப் பார்த்துக் கொண்டே போன பட்டாபிராம பிள்ளை திடுக்கிட்டு வியப்பே வடிவாக மாறி, "நம்முடைய சட்டைநாத பிள்ளையைப் பிடித்து தண்டித்து விட்டார்களாமே!" என்றார். அதைக் கேட்ட மற்ற எல்லோரும் ஏககாலத்தில் திடுக்கிட்டு, "ஹா! அப்படியா படியுங்கள், படியுங்கள்" என்று கூறி ஆவலே வடிவாகவும் பட்டாபிராம பிள்ளையின் வாயைப் பார்த்தபடியும் இருந்தனர். பட்டாபிராம பிள்ளை அடியில் கண்டபடி எழுதப்பட்டிருந்த செய்தியைப் படிக்கலானார்: (அசோஸியேடட் பிரஸ்) தஞ்சை, புதன்கிழமை. பத்து வருஷ கால தண்டனை அடைந்து தஞ்சை பெரிய ஜெயிலில் இருந்து வந்த வக்கீல் சட்டைநாத பிள்ளை சுமார் 20 தினங்களுக்கு முன் வார்டர்களின் வசத்திலிருந்து பலவந்தமாக விடுவிக்கப்பட்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவர், அவருடைய தாசி பத்மாசனி, அவளுடைய அண்ணன் கலியப் பெருமாள் பிள்ளை ஆகிய மூவரும் துருக்கர்களாக மாறி, கும்பகோணம் லப்பைத் தெருவில் இருந்தார்கள். சென்னை ஜானிஜான் கான் சாயப்பு என்ற ஒரு சாயப்பு அவர்களைப்