பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 293 வைப்பாட்டியாக வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் நான் சந்தேகமறத் தெரிந்து கொண்டிருந்தேன். அந்த நிலைமையில் சட்டைநாத பிள்ளை விடுவிக்கப்பட்டுப் போனதாகச் செய்தி வந்தது. பிறகு அவர்கள் பெட்டிக்குள் பாம்பை எனக்கு அனுப்பினார்கள். நான் முன் விவரிக்கப்பட்டபடி இறந்தவன் போல இருக்க எண்ணி, சனிக்கிழமை இரவே புறப்பட்டு கும்பகோணம் வந்து சேர்ந்தேன். ரமாமணியம்மாள் வீட்டில் வேலை செய்து வரும் கிழவியின் வீட்டில் நான் இருப்பதென்று தீர்மானித்துக் கொண்டேன். கிழவியோடு இருப்பதற்கு கிழவி வேஷமே பொருத்தமானதல்லவா? ஆகையால், நான் கிழவியாக மாறினேன். முற்றிலும் நரைத்து வெளுத்துப் போன மயிர்களால் செய்த டோப்பா ஒன்றை நான் தலையில் வைத்து, அதை நல்ல பசையினால் தலையோடு தலையாய் ஒட்டிக்கொண்டேன். நன்றாக கூடிவரம் செய்து கொண்டு சில பச்சிலைச் சரக்குகளாலான பொடியை முகத்தில் தேய்த்துக் கொண்டால், ஒருவார காலத்திற்கு மயிரே முளைக்காதென்ற ரகசியம் நான் ஏற்கெனவே தெரிந்து கொண்டிருந்தேன். ஆகையால், நான் அப்படியே செய்து புடவை உடுத்தி கிழவியாக மாறி, அந்த வேலைக்காரியின் வீட்டில் இருந்தேன். அவளுக்குப் பணம் கொடுத்து அவ்விடத்திலேயே சாப்பாட்டையும் வைத்துக் கொண்டு அவளுடைய பிரியத்தை அடைந்து உண்மைகளைக் கிரகித்து வந்தேன். அவளுக்கு மாசிலாமணியின் வீட்டு ரகசியம் எதுவும் தெரியவில்லை. ஆனால், அவன் ரமாமணியிடம் நட்பாயிருப்பது முதல் அவள் அவனை ஏமாற்றி ரகசியத்தில் வேறொருவனை வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது வரையில் நான் ஞாயிறு திங்கள் ஆகிய இரண்டு தினங்களில் தெரிந்து கொண்டேன். செவ்வாய்க் கிழமை அன்று கண்ணப்பா ஆற்றுப் பாலத்தினடியில் எழுதி யதைப் படித்து, கந்தசாமி காணப்படவில்லை என்பதையும், மன்னார்குடியார் எல்லோரும் அன்றிரவு சென்னைக்குப் போவதையும் அறிந்து கொண்டேன். கந்தசாமியை மாசிலாமணி அபகரித்து வந்திருப்பான் என்ற சந்தேகம் எனக்கு அப்போது உண்டாகவில்லை ஆகையால், அவன் சென்னையிலேயே எங்கேயாவது இருந்து இரண்டொரு தினங்களில் வந்துவிடுவான் என்று நினைத்து அதைப்பற்றி அதிக கவலை கொள்ளாமல்