பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மாயா விநோதப் பரதேசி அகப்பட்டதாம். அவசர சந்தர்ப்பத்தைக் கருதி அவர்கள் மூன்றாவது வகுப்பில் ஏறிக் கொண்டு வந்தார்களாம்" என்றார். அதைக் கேட்ட மனோன்மணியம்மாள் வியப்பும் சந்தேகமும் கொண்டு, "அப்படி நடந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. கெளரதைக்காக அவர்கள் அப்படிச் சொல்லிக் கொள்ளுகிறார்கள் போலிருக்கிறது" என்றாள். - பட்டாபிராமபிள்ளை, "இல்லை. டிக்கெட்டுகளை அவர்கள் ஸ்டேஷனில் திருப்பிக் கொடுத்த போது நான் கூடவே இருந்து என் கண்ணாலேயே பார்த்தேன். அவர்கள் முதல் வகுப்பு டிக்கெட்டுகளையே கொடுத்தார்கள். இல்லாவிட்டால், அந்த வழியாக வெளியில் விடுவார்களா" என்றார். மனோன்மணியம்மாள் அந்த விஷயத்தில் மன்னார்குடியாரைப் பற்றி தான் கொண்ட கெட்ட அபிப்பிராயம் தப்பானது என்று உடனே உணர்ந்தாள் ஆயினும், தான் மன்னார்குடியார் வீட்டில் வாழ்க்கைப் படக்கூடாது என்று கொண்ட உறுதியை மாத்திரம் தளர விடாதவளாய், "என்னவோ எல்லாம் நடக்க நடக்கத் தானாகவே விளங்கிப் போகிறது. நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்து வெளித் தோற்றத்திற்காக அவர்கள் முதல் வகுப்பு டிக்கெட்டுகள் வாங்கி வந்திருக்கலாம். என் மனசில் அவர்கள் நமக்குத் தகுந்தவர்கள் அல்ல என்று தானாகவே ஒர் எண்ணம் உண்டாகி உறுதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. என் மனப் போக்குக்கு விரோதமான காரியம் நடக்குமானால் என் உயிர் அதிக காலம் இந்த உடம்பில் நிலைத்திருக்காதெனத் தோன்றுகிறது. நான் வேறு அதிகமாய் உங்களிடம் சொல்ல இஷ்டப் படவில்லை. அவ்வளவே முடிவு" என்றாள். அதைக் கேட்ட பட்டாபிராம பிள்ளை, "அம்மா! முடிவில் எல்லாம் நன்மையிலேயே கொண்டு போய்விடும். வீணில் கவலைப்பட்டு மனசைப் புண்படுத்திக் கொள்ளாதே. இன்றாவது நீ எழுந்து வழக்கப்படி சாப்பிட்டு உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். எனக்கு நேரமாகிறது. நான் ஆஸ்பத்திரி, கோமளேசுவரன் பேட்டை முதலிய இடங்களுக்குப் போய் வந்து