பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 311 தோய்ந்து நின்றபடி மிருதுவாகவும் வாஞ்சை ததும்பிய குரலிலும் பேசத் தொடங்கி, "என்ன இது? நான் முன் தடவையில் பார்த்த மனோன்மணியம்மாளைக் காணோமே! இது யார் என்பது தெரிய வில்லையே!" என்றான். அதைக் கேட்ட மனோன்மணியம்மாள் நாணிக் குனிந்து வணக்க வொடுக்கமாக நின்றபடி, "முன் தடவையில் ஏதோ அறியாமையால் அடியாள் செய்த அபசாரத்தைப் பொறுத்தருள வேண்டும். நான் ஆங்கிலக் கல்வி கற்க வேண்டும் என்ற ஆசையில் வழி தப்பி, ஸ்திரிகளுக்கு அவசியமற்ற விஷயங்களைக் கற்று மமதை கொண்டு, செய்யத் தகாத துராசாரங்களை மேற் கொண்டொழுகி விட்டேன். இப்போது எனக்கு ஒரு சத்குருவின் தரிசனம் கிடைத்தது. ஸ்திரீகள் அத்தனை பாடுபட்டு தங்கள் ஆயுட்காலத்தை வீணாக்கி, கல்வி கற்பதைவிட, வெகு சுலபத்தில், "தெய்வந்தொழாள் கொழுநற்றொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை" என்ற ஒரு சிறிய வாக்கியத்தின் கருத்தை நான் அனுபவத்திற்குக் கொண்டு வருவதே போதுமானது என்பதை அந்த சற்குருவாகிய என் அக்காளிடம் நான் தெரிந்து கொண்டேன். கல்வி கற்பதன் பயன் முக்கியமாய் அறிவைப் பெருக்கி, அவரவர் தம் தம் நெறிப்படி நற்குண நல்லொழுக்கத்தோடு ஒழுகுவதன்றி வேறல்ல. நான் ஸ்திரீ தர்மங்களைக் கற்பதற்கு, எவ்வகையிலும் நமக்கு எதிரிடையாய் உள்ள அன்னிய நாட்டாரின் புஸ்தகங்களை ஆயிரக் கணக்கில் படித்துத் திசை தெரியாது தடுமாறும் கப்பல் போல அலைந்து, உண்மையான ஞானம் இன்னதென்று காணாமல் தவித்தேன். நம்மவர் உலகாநுபவங்களை வெண் ணெய் போலக் கடைந்து திரட்டி வைத்துள்ள மேற்கண்ட ஒரு செய்யுளில் அடங்கியுள்ள ஸாரம் இந்த உலகத்தில் எங்குமில்லை. குடும்ப வாழ்க்கை ஒற்றுமையாகவும், க்ஷேமமாகவும், மங்களகர மாகவும் நடப்பதைவிட, மனிதர் அடையக்கூடிய இம்மைப் புருஷார்த்தம் வேறொன்றுமில்லை. அதற்கு அனுகுணமாக ஸ்திரீகள் தமது புருஷரையே தெய்வமென்று கருதி அவருடைய விருப்பம் போல அடங்கி ஒடுங்கிப் பணிவாகவும்.வாஞ்சையாக வும் நடந்து கற்பிற்கரசிகளாய் விளங்குவதை விட மேலான தர்மம் வேறு என்ன இருக்கிறது? அதைத் தவிர நான் கற்றுக் கொள்ளக்