பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 மாயா விநோதப் பரதேசி கூடியது ஒன்றுமே இல்லை என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன். அதன்படி நடப்பதே எனக்கு இப்போது பரம ஆனந்தமாகத் தோன்றுகிறது. நான் என் குருவினிடம் கற்றுக் கொண்ட இந்தப் பாடத்தை இன்று முதல் இனி என் ஆயிசு கால முடிவு பரியந்தம் மறக்காமல் மனதில் வைத்து அதன்படியே நடந்து கொள்வேன் என்பது திண்ணம். இனி அடியாள் முன் போல நடந்து கொள்வேனோ என்ற சிந்தனையே தங்களுக்கு வேண்டாம்" என்று நிரம்பவும் பணிவாகவும் மிருதுவான குரலிலும் கூறினாள். அவளது எதிர்பாராத பணிவான நடத்தையைக் கண்டு, அவனது விநயமான வார்த்தைகளைக் கேட்ட மணமகன் பூரித்துப் புளகாங்கிதமடைந்து, "ஆகா! இப்போதே நான் கிருதார்த்தனானேன்! இதற்கு நிகரானதும் இதற்கு மேம்பட்டதுமான சுகமும் பாக்கியமும் புருஷருக்குக் கிடைக்கப் போகின்றனவா இங்கிலீஷ் படிப்பெதற்கு? எம்.ஏ., பட்டம் எதற்கு? ஸாரத்தை விட்டு சக்கையை நாடுகிறவர்களே அதைத் தேடிக் கொள்ளட்டும், நம்முடைய சீதாதேவி, சாவித்திரி முதலியோர் எந்த எம்.ஏ., பட்டம் பெற்று அழியாப் பெயர் அடைந்தனர்? ஸ்திரீகளுக்கு பதிவிரதா தர்மம் என்பதைவிட மேலான பட்டம் ஒன்றுமே தேவையில்லை. அதை உடையவர் களே பட்டமகிஷிகள். அவர்களே கல்வியில் சரஸ்வதிக்குச் சமதை யானவர்கள். அவர்களே விலைமதிப்பற்ற வைரக் கற்கள். அவர்களே தெவிட்டாத இன்பக் களஞ்சியம். அந்த நிலைமையை நீ அடைந்து விட்டாய் என்பதைக் காண, என் அங்கம் பூரிக்கிறது; என் உள்ளம் ஆனந்த வெள்ளமாய்ப் பொங்குகிறது. எனக்கு ஈசன் அளித்திருக்கும் மற்ற ஏராளமான செல்வம் எல்லாம் உண்மைச் செல்வமே அல்ல. பதிவிரதா தர்மத்தைக் கடைப்பிடித் தொழுகும் மகா புத்திசாலியான பெண்மணியை வாழ்க்கைத் துணைவியாக நான் பெற்றதே ஒப்பற்ற தெய்வீகச் செல்வம். "கண்ணே! ஏன் தூர நிற்கிறாய்? வா. சமீபத்தில்" என்று கூறி, அளவிட இயலாத வாஞ்சையோடும் பிரேமையோடும் அந்தப் பேடன்னத்தை சுவீகரித்துத் தழுவினான். சுபம்! சுபம்!! கபம்!!!