பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 37 வையும் அப்புறப்படுத்தி விட்டு ஒரு மூலையில் சுருட்டி நிறுத்தப் பட்டிருந்த பிரப்பம் பாய் ஒன்றை எடுத்துத் தரையில் பிரித்து வைத்து விட்டு ஜன்னலின் வழியாய் வெளியில் பார்த்தபடி சிறிது நேரம் பொறுத்திருக்க, அடுத்த நிமிஷம் திரிபுரசுந்தரியம்மாளும், வடிவாம்பாளும், அவர்களது வேலைக்காரியும் அங்கே வந்து சேர்ந்தனர். வேலைக்காரி தனது கையில் ஒரு பெருத்த வெள்ளித் தாம்பாளத்தை வைத்திருந்தாள். அதில் ஐந்நூறு ரூபாய் விலையுள்ள வசீகரமான பட்டுச் சேலை ஒன்று, ஒவ்வொன்றும் ஐம்பது ரூபாய் விலை பெறத்தக்க நான்கு இரவிக்கைத் துண்டுகள், வெள்ளிக் கிண்ணங்களில் சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி, வெற்றிலை, பாக்கு பழவகைகள் முதலிய மங்களகரமான வஸ்துக்கள் ஏராளமாக நிறைந்திருந்தன. அவர்களைக் கண்டவுடன் மனோன்மணியம்மாளோடு இருந்த வேலைக்காரி ஒடோடியும் முன் சென்று வணக்க வொடுக்கங் காட்டி மரியாதையாக அவர்களை வரவேற்று, "வாருங்கள்; வாருங்கள் இப்படி உட்கார்ந்து கொள்ளுங்கள்" என்று உவப்போடு உபசரிக்க, அவளுக்குப் பக்கத்தில் நாணத்தினாலும், அச்சத்தி னாலும் மேற் கொள்ளப்பட்டவளாய் மனோன்மணியம்மாள் குரிைந்த தலையோடு அழகாய் நின்று, தான் தனது வாயைத் திறந்து அவர்களோடு பேசலாமோ, அதுவும் தவறாய் முடியுமோ, என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள மாட்டாதவளாய்த் தத்தளித்திருக்க, அதைக் கண்ட திரிபுரசுந்தரியம்மாள், தனது மாமியார் வந்திருப்பதைக் கருதி, அவள் உத்தம ஜாதி ஸ்திரீகளின் லட்சணப்படி நாணிக் குனிந்து நிற்கிறாள் என்று நினைத்து, "வா, கண்ணு! இப்படி, இதோ உன்னுடைய அக்காள் வந்திருக்கிறாள். உன்னை எப்போது பார்க்கப் போகிறோம் என்று எனக்கும் உன் அக்காளுக்கும் இருந்த ஆவல் சொல்லி முடியாது. நேற்றும், முந்திய நாளும் கெட்ட நாள்களாய் விட்டன. இன்று நல்ல முகூர்த்த நாள். நாம் கோடித்திருந்தபடி நிச்சயதார்த்தம் இன்று நடந்திருந்தால், அந்த வைபவம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அது இப்போது கைகூடாவிட்டாலும், இந்த சுபகாலத்தில் வந்து உன்னையாவது பார்க்க வேண்டும் என்ற நினைவோடு இங்கே வர நாங்களே தயாராக இருந்தோம். அதற்குள் உன் தந்தையாரே