பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 39 பார்த்துத் தமது திருப்தியை வெளியிட்டுக் கொண்டனர். பட்டாபி ராம பிள்ளை தமது குமாரத்தியை நன்றாகப் படிக்க வைத்திருக்கி றார் என்று மாத்திரம் அவர்கள் கேள்வியுற்றிருந்தனர் ஆதலால்; அவ்வளவு அதிகமாய்ப் படித்திருப்பவளும், மிகுந்த செல்வாக்கு, அளவற்ற செல்வம், உன்னத பதவி முதலியவற்றிற்கு அதிபதியான ஒரு செல்வச் சீமானது ஏக புத்திரியாய் இருப்பவளு மான மனோன்மணியம்மாள் அகம்பாவம், ஆடம்பரம், பதற்றம் முதலிய துர்க்குணங்கள் இன்றி சுத்த சாத்வீக வடிவாய் நிரம்பவும் பணிவாகத் தங்களிடம் நடந்து கொள்வதைக் காண திரிபுரசுந்தரி யம்மாளின் உள்ளம் குளிர்ந்தது. தங்களுக்கு வந்து வாய்த்துள்ள மூத்த மருமகளைப் போலவே, அவளும் விலையில்லா மாணிக்கம் போன்றவள் என்றும், கந்தசாமி நல்ல அதிர்ஷ்டசாலி என்றும் உடனே தீர்மானித்துக் கொண்டு, வாஞ்சையாகிய அமிர்த தாரையைத் தனது இரண்டு விழிகளாலும் வழியவிட்டு, அதனால் மனோன்மணியம்மாளை அபிஷேகம் செய்விப்பவள் போல ஆசையோடும், ஆவலோடும் பன்முறை அவளது முகம் முதல் நகம் வரையில் கடாகூஜித்து உவகை பூர்த்து நெக்கு நெக்குருகித் தன்னை மறந்து நிற்க, மறுபடியும் மனோன்மணி யம்மாளது வேலைக்காரி, "தாங்கள் உட்கார்ந்து கொள்ளாமல் நிற்கிறீர்களே! பெண் தங்களோடு பேசுவதற்கு அஞ்சுகிறது. வேறே பெரியவர்கள் யாரும் இல்லை ஆகையால், தங்களைத் தக்கபடி உபசரிக்க வேண்டிய பொறுப்பெல்லாம் இந்தக் குழந்தையைச் சேர்ந்ததாய் இருந்தாலும், தாங்கள் மாமியார் ஆகப்போகிறவர்கள் என்ற லஜ்ஜையினால், குழந்தை வாயைத் திறந்து பேசமாட்டாமல் தவிக்கிறது. பிள்ளை வீட்டிற்கு எப்படி நீங்களே தலைமை வகித்து எல்லாக் காரியங்களையும் நடத்துவீர் களோ அது போல இவ்விடத்திலும் நீங்களே முதன்மையானவர் கள் ஆகிவிட்டீர்கள் ஆகையால், எல்லாவற்றையும் நீங்கள் தான் எங்களுக்கு எடுத்துக் காட்டி நடத்திக் கொண்டு போக வேண்டும். நீங்கள் முதலில் உட்கார்ந்து கொள்ளுங்கள்" என்று நிரம்பவும் பணிவாக உபசார மொழிகள் கூறினாள். அப்போது வடிவாம்பாள் தனது மாமியாரை நோக்கி, "நீங்கள் உட்கார்ந்து மனோன்மணியம்மாளிடம் பேசிக் கொண்டிருங்கள்.