பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மாயா விநோதப் பரதேசி குடிசைக்கு விஜயம் செய்வது மகா அரிதான சம்பவம். தாங்கள் தங்களுடைய வேலைக்காரரை விட்டுச் செய்யச் சொல்லும் ரசம் அன்னத்தை, நான் என்னுடைய வேலைக்காரர்களை விட்டுத் தயாரிக்கச் சொல்லுகிறேன். தாங்கள் எல்லோரும் இன்று என்னோடு போஜனம் செய்ய வேண்டும். அவ்வளவு தான் என்னுடைய கோரிக்கை. இன்று சனிக்கிழமை, ஸ்திரவாரம்; இன்று நாம் ஆரம்பிக்கும் இந்த சுபகாரியம் எப்போதும் ஸ்திரமாக இருக்க வேண்டும். ஆகையால், தாங்கள் இதை மறுக்காமல் என் விருப்பத்தைப் பூர்த்தி செய்து என்னை சந்தோஷப்படுத்த வேண்டும்" என்று நிரம்பவும் பணிவாகக் கூறினார். அதைக் கேட்ட வேலாயுதம் பிள்ளை, 'தம்பி நீங்கள் செய்யப் பிரியப்படுவது நியாயமான காரியமே. நாம் சாப்பிடுவதை எங்கே சாப்பிட்டால் என்ன; அதைப் பற்றி எனக்கு யாதொரு ஆட்சேபனையும் இல்லை. ஆயினும், நேற்று இராத்திரி நானும் என் மனிதர்களும் கலந்து பேசி ஒரு முடிவிற்கு வந்திருக்கிறோம். எங்களுக்குக் கால பலன் சரியாக இல்லை. நாம் எதிர்பார்க்காத துன்பங்கள் எல்லாம் வந்து நேருகின்றன. பையனைப் பற்றிய தகவல் எதுவும் தெரியவே இல்லை. அவன் உயிரோடு க்ஷேமமாய் இருக்கிறான் என்ற ஒரு விஷயம் நமக்கு முதலில் தெரிந்தால் அதுவே போதும் என்று நாங்கள் ஆவல் படுகிறோம். ஒரு தகவலும் கிடைக்கவில்லை. எங்களுடைய மனம் தாமரை இலை நீர்த்துளி போலத் தவித்துக் கொண்டிருக்கிறது. எங்கே யாவது போய்த் தேடுவோம், அல்லது, ஏதாவது முயற்சி செய்வோம் என்றால், எங்கே போவது என்ன செய்வதென்பது தெரியவில்லை. நமக்காக போலீசார் எல்லோரும் பாடுபடுகிறார் கள். அதுவுமன்றி முக்கியமாக எங்களுடைய சிரமத்தை எல்லாம் நீங்களே ஏற்று எங்களால் செய்யக் கூடியதைவிட ஆயிரம் மடங்கு அதிகமான பிரயத்தனங்களைச் செய்து வருகிறீர்கள். ஒவ்வொரு நிமிஷம் கழிவதும் விஷம் தலைக்கேறுவது போல, எங்களுடைய மனவேதனை அக்ஷயமாய்ப் பெருகிக் கொண்டே போகிறது. இந்த மூன்று தினங்களாய் நாங்கள் ஒரு நாளைக்கு ஒருதரம் கூட ஆகாரம் செய்யாமல் வியாகுலப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய கெட்ட காலத்திற்குச் சாந்தியாக