பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 51 நிரஞ்சன நிராமயத்தைச் சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்றிலகு திவ்ய தேஜோமயத்தைச் சிற்பர வெளிக்குள் வளர் தற்பரமதான பர தேவதையை அஞ்சலி செய்குவாம். என்று வேலாயுதம் பிள்ளை அநேகம் பாக்களைக் கூறி கற்பூர ஆரத்தி காட்டி, "ஹர ஹர, மகாதேவா, சம்போ சங்கரா" என்று கூறி ஆரத்தியைக் கீழே வைத்துவிட்டு சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து நமஸ்கரித்துக் கன்னத்தில் அடித்துக் கொண்ட பிறகு, ஆரத்தியை எடுத்து பட்டாபிராம பிள்ளை முதலிய எல்லோருக்கும் காட்ட, ஒவ்வொருவராய் அதைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு விபூதிப் பிரசாதம் வாங்கிக் கொண்டனர். வேலாயுதம் பிள்ளை பாடிய பாக்களைக் கேட்டு அவரும் மற்றவர்களும் காட்டிய பக்திப் பெருக்கைக் கண்ட மனோன்மணி யம்மாள் சித்தக் கலக்கமடைந்து சிறிது நேரம் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள். அவர் பாடிய பாக்களின் சொற் களும் கருத்துகளும் அவளது மனதில் தோன்றத் தோன்ற அவளது தேகம் பரவசமடைய ஆரம்பித்தது. தானாகவே உரோமம் புளகித்து நின்று தாண்டவமாடத் தொடங்கியது. "ஆகா! எவ்வளவு அற்புதமான பாக்கள் இப்படிப்பட்ட பாக்களும் நம்முடைய பாஷைகளில் இருக்கின்றனவா! கடவுளை இப்படி மகா அருமையான சொற்களால் வர்ணித்துள்ள வேறே தேசமும் இந்த உலகில் இருக்கிறதா? வெள்ளைக்காரர்கள் தங்களுடைய தெய்வமே உண்மையான தெய்வம் என்றும், தங்களுடைய மதத்தைத் தழுவியவர்களன்றி மற்றவர்கள் அஞ்ஞானிகள் என்றும், அவர்கள் மோகூ லோகத்தை அடைய முடியாதென்றும் அல்லவா சொல்லுகிறார்கள். இந்தப் பாட்டு என்ன சொல்லுகிறது? எத்தனையோ விதமான மதஸ்தர்கள் தன் தெய்வம் என் தெய்வம் என்று எந்த வஸ்துவைக் கொண்டாடுகிறார்களோ அந்த வஸ்துவை நாம் வணங்குவோம் என்றல்லவா சொல்லுகிறது? அது மட்டுமா? தெய்வமே இல்லை என்ற நாஸ்திக வாதத்தையும் உண்டாக்கி இருப்பது எந்த வஸ்துவோ அதை நாம் வணங்கு