பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மாயா விநோதப் பரதேசி இருவரையும் உப்பரிகைக்கு அனுப்பினான். பட்டாபிராம பிள்ளையோடு, வேலாயுதம் பிள்ளையும், கண்ணப்பாவும் உட்காந்திருந்தனர். அவர்கள் சம்பாஷித்ததைக் கேட்டுக் கொண்டு பக்கத்து அறையில் திரிபுரசுந்தரியம்மாள் மனோன் மணியம்மாள் முதலியோர் தலை மறைவாக இருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் துரைகள் மேலே வந்தனர். முன்னால் வந்த போலீஸ் கமிஷனர் பட்டாபிராம பிள்ளையை நோக்கி சந்தோவடி மாக நகைத்த வண்ணம், "நாங்கள் அகால வேளையில் வருவதைப் பற்றி மன்னிக்க வேண்டும். இருந்தாலும் உங்களுக்கு ஒரு சந்தோஷச் செய்தி சொல்ல வேண்டும் என்று நானே நேரில் இங்கே வந்தேன்' என்று கூறிய வண்ணம் அவரிடம் நெருங்கி னார். உடனே பட்டாபிராம பிள்ளை அவர்கள் இருவரையும் உட்காரச் செய்து, "நீங்கள் என் பொருட்டு இந்த அகாலத்தில் இவ்வளவு தூரம் வந்ததைப் பற்றி நானல்லவா உங்களுக்கு உபசார வார்த்தை சொல்லக் கடமைப்பட்டவனாய் இருக்கிறேன். நீங்கள் குறிக்கும் சந்தோஷச் செய்தி, நேற்று இரவில் கோமளேசு வரன் பேட்டையில் நேர்ந்த அபாயத்திலிருந்து இவர்கள் தப்பிய சங்கதிதானே' என்றார். போலீஸ் கமிஷனர்:- அந்தச் சங்கதியைத் தான் நீங்கள் டெலிபோன் மூலமாய்ப் போலிஸ் சப் இன்ஸ்பெக்டரிடத்தில் இருந்து தெரிந்து கொண்டீர்களாமே. அதைப் பற்றி நான் மறுபடியும் சொல்ல வருவேனா? கலெக்டர்:- அதிருக்கட்டும். நான் இன்று காலையில் வழக்கப் படி உங்களுடைய ஜாகைக்கு வந்தபோது, நீங்கள் விடியற்காலை யிலேயே எழுந்து எங்கேயோ போய்விட்டதாகச் சொன்னார் களே. அப்போது புறப்பட்டுப் போனவர்கள் எப்போது மறுபடி திரும்பி வந்தீர்கள்? நேற்று இரவு கோமளேசுவரன் பேட்டையில் நடந்த சம்பவத்தைப் பற்றிய செய்தி உங்களுக்கு எப்போது கிடைத்தது? கமிஷனர்- அந்தச் சம்பவத்தைப் பற்றி நான் காலையிலிருந்து இது வரையில் உங்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்ற கருத்தோடு நீங்கள் கேட்கிறீர்கள் என்பது தெரிகிறது. நேற்று இரவு