பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மாயா விநோதப் பரதேசி ஊர் ஆஸ்பத்திரியின் இரண்டாவது டாக்டரான முதலியாருக்கும் பரிச்சயம் ஏற்பட்ட தாம். அவரும் இவரும் பேசிக் கொண்டிருந்த காலத்தில், முதலியார் அந்த கோபாலசாமியின் விஷயத்தைப் பற்றி இவரிடம் தெரிவித்தாராம். இவர் அதைக் கேட்டு ஆச்சரியமடைந்து நேற்று மாலையில் முதலியாரோடு கூட ஆஸ்பத்திரிக்குப் போய் கோபால சாமியைப் பார்த்து விட்டுத் தமது ஜாகைக்குப் போனாராம். மறுபடி இன்று பகலில் இவர் முதலியாரிடம் வந்து, தாம் தமக்குத் தெரிந்த சில சிகிச்சைகளைச் செய்ய உத்தரவு கொடுத்தால், கோபாலசாமியின் பொறிக் கலக்கம் தெளியும்படி தாம் செய் வதாக இவர் தெரிவித்தாராம். அதற்காக முதலியார் இவரை அழைத்துக் கொண்டு அங்கே வந்தார். அந்தச் சமயமும் நான் போன சமயமும் தற்செயலாக ஒத்துக் கொண்டன. மற்ற நோயாளிகள் இருக்கும் இடத்திற்கு வெகு தூரத்திற்கு அப்பால் உள்ள ஓர் அறையில் கோபாலசாமி படுக்கவைக்கப்பட்டிருக்கி றான் அல்லவா. அந்த அறைக்குள் நானும், முதலியாரும், இந்த டாக்டருமாகப் போனவுடனே, இவர் கோபாலசாமி பண்டை போய் உட்கார்ந்து நாடி பார்க்கும் குழாயை அவனுடைய மார்பின் மீது வைத்து பல இடங்களில் பார்த்தார்; பார்த்தவர் உடனே என்ன செய்தார் என்றால் பக்கத்தில் நின்ற என்னைப் பார்த்து செவிடனுடன் பேசுவது போல ஓங்கிய குரலில் பலமாகப் பேசத் தொடங்கி, "என்ன மாசிலாமணிப் பிள்ளை! உம்முடைய சிநேகிதரைப் பார்க்க வேண்டும் என்று நீர் கும்பகோணத்தில் இருந்து வந்தது வீணாய்ப் போய்விட்டது. அநேகமாய்ப் பிராணன் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும்" என்றார். இவருடைய சொல்லைக் கேட்டவுடனே அதன் கருத்தை அறிந்து கொள்ளாமல் முதலியார் பிரமித்துப் போய் விட்டார். இவர் ஏதோ தந்திரம் செய்கிறார் என்று நான் உடனே உணர்ந்து கொண்டு, "டாக்டர் ஐயா! முகத்தில் இன்னம் கொஞ்சம் உயிர்க்களை இருக்கிறது. ஏதாவது மருந்து கொடுத்துப் பாருங்கள்" என்றேன். இவர் உடனே என்ன செய்தார் என்றால், "மாசிலாமணிப் பிள்ளை' உம்முடைய சிநேகிதர் இறந்து போன மாதிரி தான் எண்ண வேண்டும். இந்த மாதிரி பொறிக்கலக்கம் அடைந்தவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். மற்ற டாக்டர் களால் அவர்களுக்குத்