பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மாயா விநோதப் பரதேசி சூதை அறிந்து கொள்வார்கள் என்று அவன் ஆகாரத்தையும் நாடாமல் மனவுறுதியோடு இருந்து வந்தானாம். தன் உயிர் போனாலும் சரி, தன்னைக் குழியில் வைத்துப் புதைத்து விட்டாலும் சரி, தான் கந்தசாமியின் தகவலின்றி எதையும் வெளியிடக் கூடாது என்று அவன் கடைசி வரையில் பிணம் போல இருந்தானாம். கந்தசாமி இறந்து போய்விட்டான் என்று கேள்வியுற்ற உடனே, அவன் அதை உண்மை என்று நம்பி பயந்து போய், அதன் வரலாற்றை அறிய ஆவல் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டானாம். இது வரலாற்றை எல்லாம் கேட்ட உடனே அவனையும் அழைத்துக் கொண்டு உடனே இங்கே வர வேண்டும் என்ற ஆவல் எழுந்து துடித்தது. ஆனால், அவன் ஏழெட்டு நாளாய் ஆகாரமே இல்லாமல் கிடந்து உண்மையிலேயே இறக்கும் தருணத்தில் இருப்பதால், அவனுக்கு நல்ல ஆகாரம் கொடுத்து, இன்று இரவு முழுதும் அங்கேயே படுக்க வைத்து நாளைக்கு அழைத்துக் கொண்டு போகலாம் என்று பெரிய டாக்டர் சொன்னார். ஆகையால் நாங்கள் அவனை அழைத்து வரவில்லை. இப்பேர்ப்பட்ட அபாய காலத்தில் நிரம்பவும் சூக்ஷமைமாக அவனுடைய சூதை உணர்ந்து அசாத் தியமான தந்திரம் செய்து அவனிடத்தில் இருந்து உண்மையைக் கிரகித்த மகா நிபுணரான இந்த டாக்டரை உங்களுக்குப் பரிச்சயம் செய்து வைக்க வேண்டும் என்று நான் இவரை இங்கே அழைத்துக் கொண்டு வந்தேன். இவர் அவசரமாய்ப் போக வேண்டும் என்றார். ஐந்து நிமிஷத்திற்கு மேல் நிற்க வைப்ப தில்லை என்று சொல்லி இவரை அழைத்து வந்தேன். இது தான் நான் இப்போது உங்களுக்குக் கொண்டு வந்திருக்கும் சந்தோஷச் சங்கதி - என்றார். - போலீஸ் கமிஷனர் கூறிய மேற்படி வரலாற்றைக் கேட்ட பட்டாபிராம பிள்ளை, வேலாயுதம் பிள்ளை முதலிய எல்லோரும் அளவற்ற வியப்பும் திகைப்பும் அடைந்தனர். கல்கத்தாவில் இருந்து வந்துள்ள மிஸ்டர் வெல்டன் என்னும் டாக்டருடைய அத்யாச்சரியகரமான சாமர்த்தியத்தைப் பற்றி அவர்கள் எல் லோரும் அவரை அபாரமாக மெச்சிப் புகழ்ந்ததன்றி தங்களது