பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஜயங்கார் 63 நன்றி அறிதலையும் பன்முறை வெளியிட்டுக் கூறினர். பட்டாபி ராம பிள்ளை போலீஸ் கமிஷனரைத் தனியாக அழைத்துக் கொண்டு போய் தாம் ஏதாவது சன்மானம் செய்தால், மிஸ்டர் வெல்டன் அதை ஏற்றுக் கொள்வாரா என்று கேட்க, அவர் அதை வாங்க மாட்டார் என்று கமிஷனர் மறுமொழி கூறிவிட்டார். மிஸ்டர் வெல்டன் தமக்கு அவசரமாய்ப் போக வேண்டும் என்றும், தாம் மறுபடி வந்து அவர்களைப் பார்ப்பதாகவும் கூறி, அவ்விடத்தை விட்டு உடனே எழுந்து வெளியில் போய் விட்டார். போலிஸ் கமிஷனரும் மறுநாள் காலையில் வருவதாகக் கூறி பட்டாபிராம பிள்ளை முதலியோரிடம் விடைபெற்றுக் கொண்டு மிஸ்டர் வெல்டனைத் தொடர்ந்து போய்விட்டார். கந்தசாமி காணாமல் போன வகை இன்னதென்பது திட்டமாகத் தெரிந்து போனது ஆனாலும், அவனைப் பகைவர் இரவில் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள் என்ற செய்தியை உணர்ந்ததனால், எல்லோரும் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த கலக்கமும் கலவரமும் அடைந்தனர். தனது அழகையும், குணாதிசயங்களையும் கண்டறியும் பொருட்டு கந்தசாமியே பெண் வேஷந் தரித்து வந்தான் என்பதை உணர்ந்த மனோன்மணியம்மாளின் மன நிலைமையை நாம் யூகித்துக் கொள்வதே எளிதன்றி அதை விவரிப்பது அசாத்தியமான காரியம். அவன் தன்னிடத்தில் நடந்து கொண்ட மாதிரியும், அவன் தனக்கெதிரில் தரையில் உட்கார்ந்து கொண்ட மாதிரியும், அவனுக்கும் தனக்கும் நடந்த பல வாக்குவாதங்களும் மின்னல் பளிச்சென்று மின்னுவது போலவும் அப்போதே நிகழ்வன போலவும் அவளது கண்ணிற்கு முன் தோன்றின. கந்தசாமி பெண் வேஷத்தில் தத்ரூபம் அப்ஸர ஸ்திரி போல இருந்ததொன்றே மனோன்மணியம்மாளை அப்படியே பிரமித்து சித்தப் பிரமை கொண்டு நிலை கலங்கிப் போகும்படி செய்து விட்டது. "ஆகா! அவருடைய சொல்லழகும், புத்தியின் விசாலமும், முகத்தின் வசீகரமும், உடம்பின் அழகும் நான் என்ன வென்று சொல்லுவேன்! அவரா எனக்குப் புருஷராக வரிக்கப்பட்டிருப்பவர் ஐயோ! அவரை அதே கோலத்தில் நான் மறுபடி காணக் கிடைக்குமா ஆகா! அவர் இப்போது எங்கே இருக்கிறார்ோ தெரியவில்லையே! ஐயோ! என் தேகம்