பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 77 விசாரணைக்கு வரப் போகிறதென்றும், அதுவரையில் நான் இந்த ஊரை விட்டுப் போகாமல் இங்கேயே இருக்க வேண்டும் என்றும் சொல்லி என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு போனார். அவர் அப்படிச் செய்ததைக் கண்ட பிறகு என் மனசில் ஒரு யோசனை தோன்றிக் கொண்டே இருக்கிறது. அதை உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றே நான் முக்கிய மாக இப்போது இங்கே வந்தேன்" என்றாள். விசாலாகூஜியம்மாள், "அது என்ன யோசனை?" என்றாள். நீலலோசனியம்மாள், "இப்போது நாம் இருதிறத்தாரும் ஒருவருக் கொருவர் அன்னியோன்னியமான பந்துக்கள் போல ஆகிவிட்டோம். இருவரது மனதும் ஏகமனதாகி விட்டது. அந்த இடும்பன் சேர்வைகாரர். உங்களோடு வந்தவர்; அவர் உங்களுக்கு வேண்டிய ஒரு பெரிய மனிதருடைய காரியஸ்தர். அவர் என் விஷயத்தில் செய்த காரியம் தவறான காரியமாக இருந்தாலும், அவர் தண்டனை அடைவது உங்கள் மனசுக்கு எப்படியும் வருத்தமாகத் தான் இருக்கும். ஆகவே, அது என் மனசுக்கும் பிடிக்கவில்லை. அவர் தண்டனை அடையாமல் தப்பி வந்து விடும் படியான விசை இப்போது என் கையிலே தான் இருக் கிறது. நான் சாட்சி சொன்னால் அவர் தண்டனை அடைவார்; இல்லாவிட்டால், அவர் தப்பித்துக் கொள்வார். ஆகையால், எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இப்போது நான் இங்கே இருந்து உங்களுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. நீங்கள் இன்னம் சுமார் 20 தினங்கள் வரையில் இங்கே இருக்க நேரும். எனக்கும் இந்த ஊர்ச் சாப்பாட்டுக் கடையின் ஆகாரம் உடம்புக்கு ஒத்துக்கொள்ள வில்லை. ஆகையால், நான் நாளைய தினம் இரவு ரயில் வண்டியில் யாருக்கும் தெரியாதபடி இந்த ஊரை விட்டுப் புறப்பட்டுக் கும்பகோணம் போய், உங்கள் வீட்டி லாவது, அல்லது, உங்களுடைய நண்பரான மாசிலாமணிப் பிள்ளையின் வீட்டிலாவது தலை மறைவாக இருந்து விடலாம் என்று நினைக்கிறேன். போலீசார் உங்களிடம் வந்து கேட்டால், நான் போன இடம் உங்களுக்கும் தெரியாதென்று சொல்லி விடுங் கள். போலீசார் கொஞ்ச காலம் பார்த்துவிட்டு சாட்சி இல்லை என்று சேர்வைகாரரை விட்டு விடுவார்கள்" என்றாள்.