பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மாயா விநோதப் பரதேசி செய்தால் என்ன? அதோடு குடி முழுகிப்போய் விட்டதா? இந்த நகரத்துப் போலீஸ் கமிஷனர் என்னை நன்றாக அறிவார். இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் எல்லோரும் எனக்குப் பழக்க மானவர்களே. நான் இன்னும் எவ்வளவு நாழிகை இங்கே இருக்கப் போகிறேன். என்னை ஜாமீனில் விடும்படி கேட்டுக் கொண்டிருக் கிறேன். அதன்மேல் உத்தரவு பிறக்கிற வரையில் தான் நான் இங்கே இருக்கப் போகிறேன். அவ்வளவு தான்" என்றார். பாராக்காரன், "ஒகோ! அப்படியா சரி; இரும்; உம்முடைய பெயர் என்ன?" என்றான். துருக்க சாயப்பு, "என் பெயர் ஜானிஜான் கான் சாயப்" என்றார். அதைக் கேட்டுக் கொண்ட பாராக்காரன் அதற்கு மேல் அவரிடம் பேச்சுக் கொடுக்காமல் அவ்விடத்தை விட்டுப் போய்விட்டான். அதுவரையில் அந்த அறைக்குள் எதேச்சையாக இருந்தவனான நமது இடும்பன் சேர்வைகாரன் வேறொருவர் அவ்விடத்திற்கு வந்து விட்டதைப் பற்றி மிகுந்த கிலேசமடைந்து குன்றிப் போனவனாய்க் கம்பிக் கதவின் பக்கத்தில் நின்று வெளியில் பார்த்தபடி வெகு நேரம் இருந்தபின் அலுப்புற்று, ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான். புதிதாய் வந்தவரோடு தான் பேச்சுக் கொடுத்து, வெளியுலகத்துச் செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணம் இடும்பன் சேர்வைகாரனுக்குத் தோன்றியது. ஆனாலும், தான் இன்ன குற்றத்திற்காகக் கைதி செய்யப்பட்டிருப்பதாய் அவரிடம் சொல்ல நேரும் என்றும், அவர் பெரிய மனிதராய் இருப்பதால், கேவலம் திருடனாகக் கருதப்பட்டிருக்கும் தன்னோடு அவர் முகங் கொடுத்துப் பேசுவாரோ மாட்டாரோ என்றும் அவன் பலவாறு ஐயமுற்று, தான் என்ன செய்வதென்பதை அறியாது தவித்திருந்தான்; அன்றைய பகற்பொழுது கழிந்தது. மாலை வேளை வந்தது. வழக்கப்படி போலீசார் கைதிகளை வெளியில் அழைத்துக் கொண்டு போய் மறுபடி கொணர்ந்து அடைத்தனர். இடும்பன் சேர்வைகாரனுக்கு சர்க்கார் ஆகாரம் வந்து சேர்ந்தது. அவன் அதை ஒரு மூலையில் வைத்து உண்டான். ஜானிஜான் கான் சாயப்பு வின் சொந்தக்காரரான இன்னொரு துருக்கர் வெளியில் இருந்து அதிகாரிகளின் உத்தரவு பெற்று அவருக்கு ஆகாரம் எடுத்து வந்து