பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 99 மணியம்மாளை பலாத்காரமாய் எடுத்து வர ஆள்களை அனுப்ப அவர்கள் நமது போலிப் பெண்ணை அபகரித்து வந்ததும், அதன் பிறகு, அவன் தனது ஆட்களையே புரோகிதர் முதலியோரைப் போல வேஷம் போட்டு அந்தப் பெண்ணை சாஸ்திரப்படி தான் கலியானம் செய்து கொள்வது போல நடித்து அவளை ஏமாற்ற எண்ண, பிறர்க்குச் செய்ய நினைக்கும் கேடு தனக்கே வரும் என்ற நீதிப்படி, அவனுக்கு வந்து வாய்த்த மணப்பெண்ணே பொய் வேஷமாக முடிந்ததும், அதன் பிறகு அவன் சோபன முகூர்த்தம் நடத்திய கோலாகலமும், முடிவில், மாரீசன் பொன் மானாய் வந்து மாயமாய் மறைந்து போனது போல அந்த மணப்பெண் அவனது ஜீவாதாரமான ரகசியத்தையும் கவர்ந்து கொண்டு போனதும் முன்னரே விஸ்தாரமாகக் கூறப்பட்டன அல்லவா. அதன் பிறகு ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னையில் இருந்து வந்த சமாசாரப் பத்திரிகையைப் படித்து மன்னார்குடி வேலாயுதம் பிள்ளை முதலியோர் அங்கஹறினப்பட்டுப் போனதாய்த் தவறாக வெளியிடப்பட்டிருந்த செய்தியைப் படித்து அவன் அளவளாவி ஆனந்த பரவசமடைந்து ஆகாயத் தில் துள்ளிக் குதித்துப் பணத்தை வாரி இறைத்து அன்னதானம் வஸ்திரதானம் சுவாமி பூஜை முதலியவற்றை நடத்தி மெய்ம் மறந்து மதோன்மத்தனாய் இருக்க, மறுநாள் வந்த விபரீதச் செய்தி பேரிடி போல அவனைத் தாக்கி அவனது இறுமாப்பையும், களிப்பையும், குதுகலத்தையும் ஒரு நொடியில் துவம்சம் செய்து பஞ்சாய் பறக்கச் செய்ததும் முன்னரே கூறப்பட்டது. தான் தனது பகைவர்களுக்குச் செய்ய எண்ணிய மகா பயங்கரமான கேடு, தான் உயிருக்குயிராய் மதித்திருந்த ரமாமணியம்மாள் முதலியோருக்கே வந்து வாய்த்து விட்டதே என்பதை எண்ண, அவனது மனம் பொங்கி எழுந்து அப்படியே இடிந்து உட்கார்ந்து போய் விட்டது. வெட்கம், துக்கம், கோபம், அழுகை முதலிய பலவித உணர்ச்சிகள் ஒரே காலத்திலும் மாறிமாறி வீங்கி எழுந்து விவரிக்க இயலா வகையில் அவனை உலப்பின ஆதலால், அந்தச் செய்தியைப் படித்தவுடன் தனது படுக்கையில் படுத்தவன் அன்னம் தண்ணிர் முதலிய எதையும் நாடாமல் அப்படியே சிந்தாக்கிரகந்தனாய்க் கிடந்து