பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைப்படைப்பின் ஆக்கம்

25

துக் கொண்டுள்ளான். இவ்வாசைகள் இயற்கையால் பூர்த்தி செய்ய முடியாதவை. பூர்த்தி செய்ய முடிந்தால் அவை ஏன் ஆசைகளாக நிற்கின்றன? ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மனிதன் கருவியையும் வழியையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு இயற்கையோடு போராட்டம் நடத்துகிறான். இந்தக் குறிக்கோள்களே புறவய உலக இயக்கவியல் விதிகளால் தொழில் படுத்தப்படுகின்றன. திட்டமிடப்பட்ட ஆசைகளை நிறைவேற்ற முற்படும்பொழுது மனிதன் புறவய உலகின் விதிகளை அனுசரித்து முயலுகிறான். ஆனால் உலகிற்கு வெளியில் இருந்து தனது குறிக்கோள்கள் வந்ததுபோல அவன் எண்ணுகிறான். இயக்க விதிகளில் இருந்து சுதந்திரம் பெற்று விட்டதாக (குறிக்கோள்களைப் பற்றி) எண்ணுகிறான். இது உண்மை யில்லை. உலக யதார்த்தத்தை மனிதன் அறிவதிலிருந்துதான் குறிக்கோள்கள் தோன்றுகின்றன.

லெனினுடைய வேறொரு வரையறுப்பு, தர்க்கத்திற்கும் அறிதல் முறைக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. "அறியவனுக்கும் அறியப்படும் பொருளுக்கும் இடையேயுள்ள தொடர்பு, ஸ்தூலமான அறிபவனுக்கும், அவனது ஸ்தூலமான புறநிலைச் சூழலுக்கும் உள்ள தொடர்பாகும்."

இவ்வரையறை கலைக்கு ஓரளவு பொருந்தும். ஒரு கலைஞன் மனிதனைக் கலையில் படைக்க வேண்டுமானால், மனிதன் கலைப் பொருள் மீது கொண்டுள்ள நோக்கைக் காட்ட வேண்டுமானால், மனிதனை ஸ்தூலமான புற வாழ்க்கை நிலைமைகளில் அவன் செயல்படுவதைக் காட்ட வேண்டும். இங்கு ஸ்தூலமான மனிதனை, ஸ்தூலமான நிலைமைகளில் சித்தரிக்கவேண்டும்.

டால்ஸ்டாயின் 'அன்னா கரினா' மணமாகிக் குழந்தை இருந்தும் ரான்ஸ்கி மீது தடுக்கமுடியாத காதல் கொண்டு ஓடிப் போவதற்கு, அவளுடைய இயல்பு, நிலப்பிரபுத்துவ நிலைமைகளில் நிலப்பிரபுத்துவ மணவாழ்க்கை, ஆடம்பரம், இவற்றோடு அவளுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு இவையாவும் கொண்ட ஸ்தூலமான கதாநாயகியை ஸ்தூலமான சமூகச் சூழலில் டால்ஸ்டாய் சித்திரித்துக் காட்டுகிறார். ரான்ஸ்கியின் மோகம் மறைந்ததும் அவள் தனது பழைய வாழ்க்கை, கணவன், மகன் இவற்றின்மீது மீண்டும் ஆசை கொண்டு திரும்பும்போது, ஓடிப்போனவளை ஏற்றுக்கொள்ளுவது கெளரவத்திற்கு இழுக்கு என்று கருதுகிற பெரிய பதவியிலுள்ள கணவன் வீட்டிற்கு வருவதைத் தடை செய்கிறான். தனது நிலையை நினைத்துச் சித்தித்துச் சிந்தித்து ஓடும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளுகிறாள். இந்த நாவலின்