பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்பனைப் படிமமும் இலக்கியப் படைப்பும்

41

உண்மையைப் பொய்யால் குழப்பவே முதலாளித்துவ அறிஞர்கள் நூல்கள் எழுதத் தூண்டப்பட்டனர்.

இந்த நிலையில்தான் லெனின், குழப்ப நிலையில் தெளிவு கான, 'மெடிரியலிசமும் எம்பிரியோ கிரிடிசிசமும்' (Materialism and Embryo-criticism) என்ற தத்துவ நூலை எழுதினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய குழப்பமான அறிவுத் தோற்றக் கொள்கைகளை, மார்க்சீயச் சிந்தனையின் ஒளிமிக்க பார்வையில் அவர் ஆழ்ந்து ஆராய்ந்தார்.

கலைப்படிமம் பற்றிய கொள்கை, மார்க்சீய இயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் ஒரு பகுதியான அறிவுத் தோற்றவியலில் ஒரு கூறு. படிமம் பற்றிய கொள்கையை, மார்க்சீயப் பொதுத் தத்துவத்திலிருந்தும் அறிவுத் தோற்றவியலில் இருந்தும் பிரிக்க இயலாது.

மார்க்சீய அறிவுத் தோற்றவியலின் அடிப்படையான கருத்துப் 'பிரதிபலிப்புக் கொள்கை'யாகும் (Reflection theory). இக்கொள்கையை உருமாற்றி முதலாளித்துவத் தத்துவ அறிஞர்கள், இது முற்றிலும் பிழையான தத்துவம் என்று வாய்ப்பறை யடிக்கிறார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களின் நிதிச்செழிப்பில் பணிபுரிகிற 'மார்க்சாலஜி' துறைகள் (Maxology) லெனினுடைய அறிவுத் தோற்றக் கொள்கையை விளக்கும் மேற்குறித்த நூலை வரிவரியாக விமர்சிக்கின்றன. ஆயிரக்கணக்கான கட்டுரைகளும் நூல்களும் வெளியிடப்பட்டு முதலாளித்துவ உலகில் பரப்பப் படுகின்றன. நமது பல்கலைக்கழக மேதாவிகளின் மார்க்சீய அறிவும் அறிவுத் தோற்றவியல் பற்றிய அறிவும் 'மார்க்சாலஜிக்' கழிவோடைகளில் இருந்து அள்ளிக் கொள்ளப்பட்டவைதாம். எனவே போலிக்கொள்கையை விடுத்து லெனினுடைய பிரதிபலிப்புக் கொள்கையைச் சுருக்கமாகக் கூறுவது அவசியமாகிறது.

அறிதல் (Cognition) பற்றிய இயக்கவியல் பொருள் முதல்வாதக் கூறுதான், லெனினுடைய பிரதிபலிப்புக் கொள்கை. இதன் அம்சங்கள் வருமாறு:

1 பொருள் புறவயமான உண்மை. அது நமது உணர்வினின்றும் சுதந்தரமாகவுள்ளது.

நமது புலனுணர்வுகள், உணர்ச்சிகள், சித்தனைகள் ஆகியவற்றிற்கப்பால் சுதந்திரமாக இயங்குகிறது.

லெனின் எழுதினார்:

நமது உணர்வு, புற உலகின் பிரதிபலிப்பான படிமமே. பொருளின்றி அதன் படிமம் இருக்க முடியாதென்பது