பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனைப் படிமமும் இலக்கியப் படைப்பும்

57

ஜூர்கிஸ் இரத்தமும் சதையுமுடையவனாகப் படைக்கப்பட வில்லை.

அப்டன் சிங்க்ளேர் தொழிலாளர் சார்பு எழுத்தாளர் என்பதில் சந்தேகமில்லை. சோஷலிசம்தான் தொழிலாளர் போராட்டங்களுக்கு வழிகாட்டும் குறிக்கோள் என்பதிலும் அவருக்கு ஐயம் எதுவும் இல்லை. ஆனால் அவர் உணர்ச்சிவயமான, சோஷலிஸ்டு (Socialist in Emotion). பிற்காலத்தில் சோகை பிடித்த முதலாளித்துவச் சோஷளிசத்தை அவர் ஆதரித்தார். சோவியத் மக்கள் மீது அளவற்ற நேசம் அவருக்குண்டு, அவர் மறைவிற்கு இரண்டு வாரங்களுக்கு முன் அவர்களுக்கு ஒரு செய்தி அனுப்பினார்.

சோவியத் மக்களுக்கு முக்கியமானதொன்றைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இதுவரை செய்து வந்ததையெல்லாம், தொடர்ந்து செய்து வாருங்கள். மனிதகுலம் முழுவதும் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறது. உங்கள் பணி உன்னதமானது.

அவர் முதலாளித்துவப் பத்திரிகைகளின் தாக்குதலுக்கு உள்ளானார். ஆனால் வரலாற்றின் ஒளியில் நீதிக்காகப் போராடிய தலைசிறந்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். உலக இலக்கியத்தில், சர்வதேசத் தொழிலாளர் விடுதலைக்காகத் தமதுவாழ்க்கையை அர்ப்பணித்த, தமது கலைத்திறமையைப் பயன்படுத்திய கலைப் படைப்பாளிகளில் அவரும் ஒருவர்.

அழகற்றது, ரசனையற்றது. என்று கருதப்பட்ட கதைப் பொருள்களான சுரங்கம், எண்ணெய், இறைச்சித் தொழில் போன்றவைகளைத் தமது கலைப் படைப்புக்குள்ளாக்கி, சமூக முரண்பாடுகளையும் போராட்டங்களையும், தொழிலாளி வர்க்கத்தின் சார்பில் நின்று சித்திரித்த மிகச் சில அமெரிக்க எழுத்தாளர்களில் அவர் மறக்க முடியாதவர்.

கார்க்கியின் படைப்புத் தொடக்கம் ஏழை எளிய மக்களின வாழ்க்கையைச் சித்திரித்ததுதான். மாஸ்கோவில் புரட்சி முற்காலச் சேரி வாழ்க்கையைக் கலைப் பொருளாகக் கொண்டு அதல பாதாளம் (Lower depths) போன்ற நாடகங்களும் குறு நாவல்களும் படைத்தார். இதில் கதாபாத்திரங்களின் உள்ளத்தில் சமூக வர்க்க உணர்வு இல்லை.

அதன் பின்னர் எதிரிகள் (Enemies) என்ற நாடகத்தில் தொழிலாளர், முதலாளிகள் என்ற சமூகப் பிரிவுகளையும், சமூகத்தில் மனித வாழ்க்கையை எல்லா வகையிலும் கட்டுப்படுத்துகிற சக்தி முதலாளித்துவ வர்க்கத்திற்கு உண்டு. என்-