பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மரபும் மாற்றமும்

63


லியோனோவ், இங்கு கீதேயின் கருத்தை விளக்கிக் கூறுவதாகத் தோன்றுகிறது. தனியான எழுத்தாளன் ஒரு கூட்டமைப்பின் உறுப்பினன். எல்லாக் காலத்திலும் எல்லா நாடுகளிலும் தோன்றியுள்ள எழுத்தாளர் பரம்பரையைச் சார்ந்தவன். தற்கால இலக்கியம் முற்காட்டப்பட்ட வரைபடத்தில் காணப்படும் மூலைக்கோடு போல உலக இலக்கிய மரபான இணைகரத்தினுள் இருக்கிறது. தற்கால இலக்கியம் உலக இலக்கியப் பொன்னாரத்தில் ஒரு சிறு கண்ணியாகும். பண்டைய இலக்கியவாதிகளுக்கும் இது பொதுவான கருத்து.

மரபிற்கும் மாற்றத்திற்கும் இடையேயுள்ள தொடர்பை அறிவதற்குத் தடையாக இரண்டு நேர் முரணான கருத்துக்கள் உள்ளன.

ஒன்று கொச்சையான சமூகவியல் கருத்து. இது இலக்கியத்தின் இதயத்தை இரண்டாகப் பிளக்கிறது. ஒரு கலைப் படைப்பின் தத்துவக் கருத்தை, அதன் வெளியீட்டு முறை, உருவ அமைப்பிலிருந்து திரித்து விடுவது (சொல்லாக்கம், தடை, பொருளடக்கம் ஆகிய வெளியீட்டு முறைகளை, அதன் தத்துவார்த்த உள்ளடக்கத்திலிருந்து பிரித்துக் காண்பது).
மற்றொன்று இதற்கு நேர் எதிரிடையான கருத்து. மேற்கூறிய உருவவாதத்திற்கு எதிரிகள், 'உள்ளடக்கத்தை அதன் உருவ வெளிப்பாட்டிலிருந்து பிரிக்க முடியாது' என்ற கருத்தை முன் வைக்கிறார்கள்.

இதனைப் பெச்சர் என்னும் எழுத்தாளர், 'உருவவாதம் தலைகீழாக நிற்கிறது' என்று வருணித்தார்.

புகழ்பெற்ற 'போரும் அமைதியும்' என்னும் நாவலில், டால்ஸ்டாய் தமது கதை வீரர்களை உருவாக்கும்பொழுது இரு வகையான யதார்த்தங்களைக் கண்டார். ஒன்று நெப்போலியன் காலத்து வரலாற்று யதார்த்தம். மற்றொன்று ஹோமர் காலத்து இலக்கிய யதார்த்தம். முதலாவது சமூகவியல் விதிகளுக்குட்பட்டது. இரண்டாவது அழகியல் விதிகளுக்குட்பட்டது. இவற்றை முறையே முதலாவது உண்மை, இரண்டாவது உண்மை என அழைக்கலாம்.

சில எழுத்தாளர்கள் வாழ்க்கையும் கலையும் எவ்விதத் தொடர்புமில்லாதவை என்றும், கலைப் படிமங்கள்தான் உண்மையானவை என்றும் வாதாடுகிறார்கள்,

தனிக் கலைஞனது உள்ளத்தில் பிரதிபலிக்கப்படுவது வாழ்க்கை உண்மை மட்டுமன்று. கலை வளர்ச்சிப் போக்கில், வரலாற்றுக் காலங்களில் பிற கலைஞர்களின் உள்ளங்களில் பிரதிபலிக்கப்பட்ட படிமங்களின் கலை உண்மைகளும் அவன் உள்ளத்தில் நிழலாடுகின்றன. டால்ஸ்டாய், ஹோமரை