பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

நா. வானமாமலை

இதுவே தற்கால வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கலையுணர்வில் அறியவும் கலைப் படிமமாக உருவாக்கவும் முடியாத நிலைமையை நவீனத்துவவாதிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது கருத்து போலந்து கம்யூனிஸ்டு எழுத்தாளர்களுடையது. உலக இலக்கியத்தில் இரண்டு கலைப்போக்குகளை அவர்கள் காண்கிறார்கள். ஒன்று ரியலிசப் போக்கு பால்ஸாக், டால்ஸ்டாய், ஷோலகாவ், லியோனோவ் போன்றவர்கள் இப் போக்கின் சார்பாளர்கள். இரண்டு, நவீனத்துவப் போக்கு இதன் சார்பாளர்கள் புரூஸ்ட், ஜாய்ஸ், காப்ஃகா ஆகியோர். இவ்விரு போக்குகளையும் முரண்பட்டு மோதவிடக்கூடாது என்பது இவர்களுடைய எண்ணம்.

போலந்து எழுத்தாளர் மாதுயெவ்ஸ்கி எழுதுகிறார்:

இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தில் ஷோலக்காவி லிருந்து தாமஸ்மான் வரை, ஜாய்ஸிலிருந்து காப்ஃகாவரை அனைவரும் ஈட்டியிருக்கும் இலக்கியப் படைப்புகள் உலக மனைத்திற்கும் பொதுச் சொத்தாகும்.

இது புதிய கருத்து அன்று. மாதுயெவ்ஸ்கிக்கு முன், நவீனத்துவம் என்ற இலக்கியப் போக்கை ஆராய்ந்த மரியோ அரிகாடா என்ற இத்தாவிய மார்க்சிய அறிஞர், சோஷலிச ரியலிசவாதிகளான பெர்த்தோல்ட் பிரெஷ்ட் (ஜெர்மன் நாடக ஆசிரியர், எழுத்தாளர், மார்க்சிஸ்டு), மாயகாவ்ஸ்கி (சோவியத் புரட்சிக் கவிஞர்) முதலியவர்களையும் நவீனத்துவப் போக்கில் சேர்த்துள்ளார். இதற்கு அவர் காட்டுகின்ற சான்றுகள், அவர்கள் ஒருகாலத்தில் நவீனத்துவப் போக்குகளை மேற்கொண்டிருந்தார்கள் என்பதே.

பிளாக், மாயகாவ்ஸ்கி, பிரெஷ்ட் முதலிய சோஷலிச ரியலிச எழுத்தாளர்கள், தங்கள் இளமைக் காலத்தில் சிற்சில நவீனத்துவக் கருத்துக்களால் கவரப்பட்டிருந்தார்கள் என்று சோவியத் ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் குறியீட்டு முறை, வருங்காலத்துவம், ஸ்ர்ரியலிசம், எஃஸ் பிரஷனிசம் என்ற நவீனத்துவக் கொள்கைகளால் அவர்களு டைய இலக்கியப் படைப்புகள் வழிகாட்டப்படவில்லை. நவீனத்துவம் அவர்களுடைய முன்னேற்றத்தைத் தடைப்படுத்தியதே அன்றி, அவர்களுடைய படைப்பிற்கு ஊக்கம் அளிக்க வில்லை.

சோஷலிஸ்ட் ரியலிஸ்டுக் கொள்கைதான் அவர்களுடைய இலக்கியப் படைப்புகளுக்குத் தத்துவ ஒளி வீசிற்று. வருங்காலத்துவக் கொள்கை மாயகாவ்ஸ்கி மீது முதன்மையான