பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மரபும் மாற்றமும்

79


கலையின் பிரதிபலிப்புக்கு அடிப்படை வாழ்க்கையே என்பது டால்ஸ்டாயின் மூலமந்திரமாகும்.

இன்றைய சோவியத் நிலைமைகளில், சோவியத் இலக்கிய வாதிகள் இலக்கியம் படைக்கிறார்கள். புதிய புறவய உண்மைகளையும், அவ்வுண்மைகள் தோற்றுவிக்கிற புதிய பிரச்சினைகளையும் அவர்கள் அறிந்தும் உணர்ந்தும் இலக்கியம் படைக்க வேண்டியுள்ளது.

டால்ஸ்டாய், சோலா, டிரீஸர், பிரேம்சந்த் போன்றோர் காலத்திலும், நாட்டிலும் காணப்படாத புதுமையைச் சோவியத் எழுத்தாளர்கள் காண்கிறார்கள். இவர்கள், அவற்றைச் சில இலக்கியச் சூத்திரங்கள் மூலம் அறிந்துகொள்ளவில்லை.

வாழ்க்கையைக் கலைப் படைப்பு ஆக்குவதற்குத் துணை செய்கின்ற அழகியல் விதிகளின் அறிவைப் பயன்படுத்திக் கலைப் படிமங்களைப் படைக்கிறார்கள்.

அழகியல் மரபை அவர்கள் தமது முன்னோர்களான கலைப் படைப்பாளிகளிடமிருந்தும் தம் காலத்துக் கலைஞர்களிடமிருந்தும் கற்றுக் கொள்கிறார்கள். இதனை அழகியல் பற்றி விவாதிக்கின்ற தத்துவங்களாகக் கற்பதன் மூலம் விரிவு படுத்திக்கொள்கிறார்கள்.

அழகியல் வரலாறு என்பது மரபும் மாற்றமும் என்ற முரண்பட்ட சக்திகளின் ஒருமையாகும். ரியலச எழுத்தாளர்களது கலைப் பரம்பரை மிகப் பரந்த உலக இலக்கியத்தின் செம்மையான மரபாகும். அதனோடு சோசலிசச் சமுதாயத்தின் அறுபது ஆண்டு மகத்தான கலை வளர்ச்சியின் மரபும் இணைகிறது.

சோஷலிஸ்டு ரியலிசத்தின் மரபை வளர்த்தவர்களில் முக்கியமானவர்கள் கார்க்கியும் மாயகாவ்ஸ்கியும் ஆவர்.

மார்ட் புரூப் என்னும் சோவியத் எழுத்தாளர் 1957இல் ரோம் நகரில் நடைபெற்ற உலக எழுத்தாளர் கூட்டத்தில் சோசலிஸ்டு ரியலிச மாற்றம் (innovation) பற்றிப் பேசினார்:

'ஒன்றையே திரும்பத் திரும்பச் செய்வது, கற்றுக்கொள்வதன் தாய்' ஆகும் (Repetition is the mother of learning) என்றோர் பழமொழி உள்ளது. இதனை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் இப்பழமொழி கலைப் படைப்புக்குப் பொருந்தாது. இக்கருத்து கலைப் படைப்பின் புதுமைக்கு எதிரி. திரும்பத் திரும்பச் சொல்லுவதோ, திரும்பத் திரும்பப் படைப்பதோ கலை ஆகாது. தொடர்ச்சியாளர்களுக்கும் (Continuators) திரும்பச் சொல்லுபவர்களுக்கும் (Repeators) இடையே கலைஞன், கலைஞனல்லாதவன்