பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறும் என்பதையும் தம் ஆயுட் காலம் முழுவதும் ஆராய்ந்து மார்க்ஸ், மூலதனம்’ எனும் தனது நூலில் விளக்கமாக எழுதினர். இந் நூல் உலகத் தில் விஞ்ஞானத்தால் உற்பத்தி சக்திகள் வர லாற்றில் என்றுமில்லாத அளவில் வளர்ந்திருக்கும் காலத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கு பொருளா தாரம், முதலாளித்துவ வளர்ச்சி ப்ற்றிய விஞ் ஞான பூர்வமான அறிவை அளித்து, அதன் இயக் கத்தில் நியதிகளை வெளிப்படுத்தி அச்சமுதாயத்தை மாற்றும் வழிகளைக் கற்பித்தது. இதனை அரசியல் பொருளாதாரம் என்று கூறுகிருேம். இதனையே இரு பகுதிகளாகப் பிரித்து முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் என்று தற்காலத்தில் கூறுகிருேம். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் என்ற மூன்று தத்துவாசிரியர்களின் நூல்கள் எழுதப்பட்டபின், சோஷலிஸ்ட் புரட்சி நடந்து, கருத்துலகில் மட்டும் நிலவியிருந்து சோஷ லிச சமுதாயம் புறநிலை உண்மையாகி வளர்ச்சி பெற்றபின், அதன் இயக்கம் பற்றிய அறிவு ஒரு தனிப்பகுதியாகி விட்டது. - இதனுல் மார்க்ளியே தத்துவம் இன்று முக்கிய மாக நான்கு பகுதிகளாகக் கற்றுக் கொள்ளப்படு கிறது. - - இச் சிறு நூலில் மார்க்ஸிய தத்துவத்தின் இரண்டாவது பகுதியான வரலாற்றியல் பொருள் @pgabairrá5lb (Historical Materialism) Lipòpólu stav அடிப்படையான கருத்துக்களைக் காண்போம். வரலாற்றுப் பொருள் முதல்வாதம் வரலாறு (History) என்பது மனிதனின சமூக சிந்தனைகளால், கருத்துக்களால் உருவானது என்று பழைய சித்தாந்தங்கள் கூறி வந்தன. பண்டைக் 3