பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதிர்வதை ஞாபகத்தில் வைத்துள்ளவர்களுக்கு. புரட்சி பற்றி எங்கெல்ஸ் எழுதியது மறந்துபோய் விட்டது. புரட்சியின் பாத்திரம் பற்றி எங்கெல்வின் வரலாற்றியல் ஆராய்ச்சி, புரட்சிக் காவியமாகக் காணப்படுகிறது. இதை யாரும் ஞாபகத்தில் வைத்திருக்கவில்லை. இக் கருத்தின் முக்கியத்துவம் பற்றி நினைப்பதோ, அல்லது இக் கருத்தைப் பிரச் சாரம் செய்வதோ அவசியமென்று நவீன சோஷ லிஸ்டுக் கட்சிகளுக்குத் தோன்றவில்லை ஆயினும் இவையிரண்டையும் பிரிக்கமுடியாத ஒரு கருத்தின் இரு அம்சங்களாகவே எங்கெல்ஸ் எழுதியுள்ளார். "பயங்கரமான சக்தியாக மட்டுமல்லாமல் வேருேர் பாத்திரத்தையும், வன்முறை புரட்சி வரலாற்றில் வகிக்கிறது. அதுதான் அதன் புரட்சி, கரமான பாத்திரம். மார்க்ஸினுடைய சொற்களில் கூறுவதானுல் புரட்சிதான், புதிய சமுதாயத்தை தன் கருவினுள் கொண்டிருக்கும் ஒவ்வொரு பழைய சமுதாயத்திற்கும். (புதியது பிரசவிக்க) ஒரு மருத்து வச்சியாகும். இறந்துவிட்ட, வளர முடியாத அரசியல் வடிவங்களைப் பிணைந்து கொண்டு சமுதாய இயக்கம் வெளிப்படுவதற்கு, புரட்சி என்னும் கருவி தேவையாக இருக்கிறது. பூர்ஷாவா அரசை, பாட்டாளி வர்க்க அரசால் அடக்குவது வன்முறைப் புரட்சியல்லாமல் சாத்திய மில்லை. பாட்டாளி வர்க்க அரசு அகற்றப்படுவது, உதிர்ந்துபோகிற முறையிலன்றிச் சாத்தியமில்லை." {லெனின்-அரசும் புரட்சியும் என்ற நூலில்) அரசு பற்றிய மார்க்சீய போதனைகளை, எங்கெல் லின் கருத்துக்களின் மூலமும், அக்கருத்து பற்றி லெனினுடைய விளக்கங்கள் மூலமும் தெரிந்து கொண்டோம். இனி புரட்சிக்கால கட்டத்தின் நிகழ்ச்சிகளிலிருந்து, நடைமுறையில் இக் கொள்கை 109