பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோஷலிஸ் நிர்மாணக் கட்டம் முற்றுபெறும் பொழுது ஏற்பட்டுள்ள சமூக-பொருளாதார մոց: தல்கள், ஜனநாயகத்தைப் பெரு வளர்ச்சியடையச் செய்கின்றன. சோஷலிஸ் சமுதாயத்தில், வேலை செய்யும் உரிமை, ஒய்வு பெறும் உரிமை, கல்வி பெறும் உரிமை முதலிய அடிப்படை உரிமைகள், குடிமக்கள் அனைவருக்கும் சோஷலிஸ்ச் சட்டங்களால் அளிக்கப் படுகின்றன. மக்களின் பொருளாயத வாழ்வில் செழிப்பு அதிகரிக்கிறது. ஆன்மீக வாழ்வில் பண். பாட்டு நிலை உயருகிறது. முதலாளித்துவத்திலிருந்து சோஷலிஸ்த்திற்கு மாறும் காலத்தில் இருந்ததை விட, அதிகமாகப் பொது மக்கள் அரசாங்கப் பணி களில் ஈடுபடுகிரு.ர்கள். சோஷலிஸ் நிர்மானத் தால், மக்களுடைய சோஷலிஸ் உணர்வு, உயர்ந்த நிலையை அடைகிறது. தொழிலாளி வர்க்கம், விவ. சாயி வர்க்கம் அறிவாளிப்பகுதியினர் எல்லோரும் நெருங்கிய நேச உறவை வளர்த்துக் கொள்கின்ற னர். இவ்வாறு நேச வர்க்கங்களாகி. சோஷலிஸ் உணர்வால் ஒன்றுபட்டு உழைக்கும் மக்கள் அர சாங்கப் பணிகளில் மேலும் மேலும் பங்கு கொள்ள முன் வருவதால், தொழிலாளி வர்க்க ஜனநாயகம் மக்களுடைய ஜனநாயகமாக வளருகிறது. இந் நிலைமைகள் தோன்றும்பொழுது, சோஷலிஸ் அரசு அனைத்து மக்களின் அரசாக மாறுகிறது. அப் பொழுது அது அனைத்து மக்களின் இச்சா சக்தியை பிரதிபலிக்கிறது. இப்பொழுதும் தொழிலாளி வர்க் கம் அனைத்து வர்க்கங்களிலும் முற்போக்கான வர்க் கம் ஆதலால், இவ்வரசில் தலைமைப் பாத்திரம் வகிக்கிறது. இப்பொழுது ஒரு வர்க்கத்தின் ஆதி கம் அரசாங்க இயந்திரத்தில் இல்லை. எல்ல: கங்களும், தொழிலாளி வர்க்கத்தின்