பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாங்கப்படுகிறது. மக்கள் கொடுக்கும் விலையில் ஒரு பகுதி அந்தப் பொருளின் மதிப்பில் சம்பந்தப்படாத சாதனங்களின் சொந்தக்காரனைப் போய்ச் சேரு கிறது. எனவே ஒரு குறிப்பிட்ட சமுதாய அமைப் பில் உற்பத்திக்குக் காரணமான உடைமைகளின் சொந்தக்காரனுக இருக்கும் வர்க்கம்தான் ஆளும் வர்க்கம் ஆகிறது. அந்த ஆளும் வர்க்கத்தின் சிந்தனை தான் அந்தச் சமுதாயம் முழுவதிலுமுள்ள மற்ற வர்க்கங்களின் சிந்தனையாக அமையும். அதற்காக அந்த சிந்தனைகளை அனைவரும் ஏற்றுக் கொள்ளுகிருர் கள் என்பதுஅர்த்தமல்ல. ஆனல் ஆளும் வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்தின் சிந்தனைகளும், சட்டங் களும், தத்துவங்களும், இலக்கியமும், ஒழுக்க நெறி களும்தான் பரப்பப்படும்-அமுல் நடத்தப்படும். அதற்கான அதிகாரம் அவர்களிடம்தான் இருக்கும். அதேசமயம் மற்ற வர்க்கங்களின் சிந்தனை கட்டுப் படுத்தப்படும். அதற்காக சிந்தனையே தோன்ருது என்பதல்ல. அந்தந்க வர்க்கத்தில் உள்ளவனுக்கு அந்தந்த வர்க்கத்தின் சிந்தனை எழத்தான் செய்யும், ஆனல் சட்டத்தின் மூலமும், பிரச்சாரத்தின் மூலமும், ஒழுங்கு முறைகளின் மூலமும் மற்ற வர்க்கங்களின் சிந்தனைகள், கருத்துக்கள் எழவொட் டாமல் தடுக்கப்படும். இவ்வாருகத்தான் தத் துவம், இலக்கியம், சட்டம் இவற்றிற்கும் உற்பத்தி முறைகளுக்கும் இடையேயுள்ள சமூக உறவு முறை களை மார்க்ஸும் எங்கெல்ஸும் விவரித்தார்கள், இதிலிருந்துதான் இலக்கியம் என்ருல் என்ன, தத்து வம் என்ருல் என்ன என்று தனிக் தனியாக பின்னர் விளக்கினர்கள். முந்தைய ஆசிரியர்கள் வாழ்க்கை யின் அடிப்படையையே மறுத்ததால் இவற்றை விளக்க முடியவில்லை. மார்க்ஸும் எங்கல்ஸும்தான் விளக்கினர்கள். எனவே சமூக வளர்ச்சி பற்றிய சரித்திரவியல் பொருள் முதல்வாதத்தின் தோற்றம் 警