பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு மாபெரும் பரட்சி அதனை ஏற்படுத்தியவர்கள் மார்க்ாைம் எங்கெல்ஸும். காலங்காலமாக உற்பத் தி சாதனங்கள் வளர்ச்சி யடைந்து வந்துள்ளன. அந்தந்த சமுதாய தேவை களுக்கேற்ப, உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக அவற்றிற்குத் தகுந்தாற்போல உற்பத்தி சாதனங் களும் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. உற்பத்திச் சாதனங்களை அழித்துவிட்டு சமுதாயத்தை மாற்ற முடியாக. சமுதாயத்தை மாற்றுவது என்பது, உற்பத்தி சாதனங்கள் யாருடைய கட்டுப்பாட் டினுள் இருக்கிறது, உற்பத்தியாகும் பொருள்கள் யாருக்குச் சொந்தமாக இருக்கிறது என்பதைப் பற்றியது. உற்பத்திச் சாதனங்கள் - அந்த சமுதாய்த்தின் ஒரு சிறுபான்மையினருக்கு சொந்த மாக இருந்தால், அங்கு தயாராகும் பொருள்கள் அந்தச் சிறுபான்மையினரின் லாபநோக்கு என்னும் வட்டத்தினுள்தாம் அமையும். ஆனல் உற்பத்தி யான பொருள்களோ, சமுதாயம் முழுவதிலுமுள்ள மக்களால் உபயோகிக்கப்படும் சமூகத் தன்மை உடையது. உற்பத்தியாகும் பொருள்களை முதலாளி மட்டும் வைத்துக் கொள்வதில்லை. அவை மக்களுக்கு விலைக்கு விற்கப்படுகிறது. இந்த உற்பத்திக்குக் காரணமாக தனது உழைப்பைச் செலுத்தக்கூடிய தொழிலாளி தன்னுடைய உழைப்பைக் கொடுத்து ஒருபகதி தனக்குக் கூலியாகப் பெறுகிருன். ஒரு பகதியை உபரி உழைப்பாக முதலாளிக்கும் கொடுக் கிருன். அப்படியானல், சமுதாய மாற்றத்திற்கு உற்பத்தி சாதனங்கள் தனியுடைமையாளர்களிட மிருந்து மாற்றி சமுதாயம் முழுமைக்கும் சொந்த மானதாக மாற்ற வேண்டும். அப்படியென்ருல்உற்பக்தி சாதனங்களை ஒரு இடத்திலிருந்து மாற்றி இன்னேரிடத்தில் கொடுப்பதுதான் சமு த ய மாற்றமா? உற்பத்தி உடைமைகளை எல்லோருக்கும் 16