பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடைமைகளாக்குவதும், உற்பத்தி பொருள்களை எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்வதும்தான் சமுதாய மாற்றம். எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்வது என்றால்-காமராஜ் சொல்லியது மாதிரி ஒரு தொழிற்சாலையை அக்குவேற,. ஆணிவேறாகப் பிரித்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்து விடுவதா? இதுதான் சோஷலிசமா? அப்படிச் செய்தால் உற்பத்தியே நடக்காது. சோஷலிசமாற்றம் என்பது மக்களுக்காக உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அல்லது அந்த உற்பத்தி சாதனத்தை நிர்வகிக்கம் பொறுப்பை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சர்க்காரிடம் ஒப்படைப்பது. அந்த சர்க்கார் உடைமை வர்க்கத்தின் சர்க்கார் அல்ல. சுரண்டப்பட்ட வர்க்கங்களின் அரசு இந்த சர்க்கார். முதல் கட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் சர்க்காராக இருக்கும். இதுதான் அதிகார மாற்றம் அல்லது சமுதாயப் புரட்சி என்பது. இந்த அதிகாரம், தனி உடைமையை ஒழிக்கப் பயன்படுத்தப்படும்.


உடைமை மாறியதும் நோக்கமும் மாறி விடுகிறது. அது எப்படி? முதலாளிக்கவ சர்க்காரின் கீழுள்ள தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதின் நோக்கம் - லாபம் தான். அதாவது முதலாளித்துவ சுரண்டல்தான். தொமிலாளியின் உழைப்பின் ஒருபகுதி லாபம் என்ற பெயரில் முதலாளிக்குச் சென்று சேருகிறது. அதாவது தொழிலாளியின் உழைப்பினால் உண்டாகும் உபரி உழைப்பு, லாபம் கிடைக்காது என்று சொன்னால் முதலாளி பொருளை உற்பத்தி செய்வானா? விலை குறைகிறது என்பதனால் அமெரிக்காவிலுள்ள முதலாளிகள் கார்களை உற்பத்தி செய்வதைக் குறைத்துள்ளார்கள். கோயம்புத்தூர் பஞ்சாலைத் தொழிலதிபர்கள் துணிஉற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்று கூடி பேசியுள்ளார்கள்.

11