பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எனவே உற்பத்தி முதலாளிக்கு லாபம் தருவது. அல்ை மக்களுக்குச் சமூகத் தேவை. அதேசமயம் தொழிலாளிக்கு அதுதான் கூலி. ஆக, சமுதாய அமைப்பு மாறும்போது இதுபோன்ற நோக்கங்கள் மாறுதலடைகின்றன. உற்பத்தியின் நோக்கம் சமு தாயத்தின் அனைத்துப் பகுதியினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்ருகிறது. உற்பத்தியின் நோக் கம் உற்பத்தியில் உழைப்பை செலுத்துகின்ற தொழி லாளிக்க மட்டுமல்லாமல், உற்பத்தி பொருள்களை உபயோகிக்கின்ற அனைத்தப் பகுதியினரின் தேவை களே பூர்த்தி செய்வது என்ருகிறது. நோக்கம் மாறி விடுகிறது. நோக்கம் மாறும்போது தனி மனித லாபம் என்ற அச்சமே இல்லாமல் போய்விடுகிறது. லாபம் ஒன்றுக்காக மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட தேவையில்லாத பொருள்களின் உற்பத்தி கட்டுப் படுத்தப்படுகிறது. உதாரணமாக ஒரு கம்பெனி முகத்தில் பூசக்கூடிய பவுடர் தயாரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதே கம்பெனி ஒரு மருந் தினேயும் தயாரிக்கிறது என வைத்துக்கொள்வோம். குறிப்பிட்ட ஒரே ஒரு ரசாயனப் பொருளைச் சேர்த் தால் பவுடர் மருந்தாகிவிடும். உலகம் முழுமைக் கும் ஏராளமான மருந்து தேவைப்படுகிறது. அது அங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மூன்று மாதத் திற்கு மருந்து உற்பத்தி நிறுத்தப்படும். உலக மார்க் செட்டில் மருந்தின் தேவையினல், அதன் விலை அதிகமாகிவிடும். இதை எதிர்பார்த்தத்தான் முத வாளி திட்டமிட்டு உற்பத்தியை நிறுத்துகிருன். மற்ருெரு மூன்று மாதத்திற்கு பவுடர் உற்பத்தி நிறுத்தப்படும், அதனுடைய விலையும் கூடும். மத லாளி அதிக லாபம் சம்பாதிக்க முடிகிறது. எனவே முதலாளித்துவ அமைப்பில் உற்ப்த்தியின் நோக்கம் லாபம் என்பது மட்டும்தான். மக்களின் தேவை களைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை. உற்பத்தியின் $2