பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதற்காக இங்கே குறிப்பிடுகிறேன் என்ருல், அந்தக் குரங்கின் கையமைப்பு மாற வாய்ப்பு ஏற்பட வில்லை. காரணம் அது கருவிகளைப் பயன்படுத்துவ தில்லை. தனக்குத் தேவையான பொருள்களை தானே உற்பத்தி செய்யும் உற்பத்தியாளன் அல்ல. ஆளுல் மனிதன் தனக்குத் தேவையான பொருள் களைத் தானே உற்பத்தி செய்து கொள்கிருன். இதனுல் கையமைப்பு, தேவைக்குத் தகுந்தாற்போல மாறுதலடைய அவனுக்கு வாய்ப்பு உண்டு. கையமைப்பு மட்டுமல்ல-கையின் வளர்ச்சியோடு உடலமைப்பு வளர்ச்சியும், மூளை வளர்ச்சியும் தொடர்ந்து இணேயாக உழைப்பினல் அவனுக்கு உண்டாகிறது. - என்றைக்கு மனிதன் கருவியைச் செய்யத் தொடங்குகிருனே அன்றிலிருந்து, இயற்கையின் கொடுமையிலிருந்து, இயற்கைக்குக் கட்டுப்பட்டு இயற்கையை முழுக்க முழுக்க நம்பி வாழ்ந்த நிலையி விருந்து விடுதலே பெறுகிருன். எவ்வளவுக் கெவ்வளவு இயற்கையை எதிர்பாராமல் தனக்குத் தேவையான பொருள்களை தானே சுயமாக உற்பத்தி செய்ய மனிதனுல் முடிகிறதோ அந்த அளவிற்கு அவன் இயற்கையிலிருந்து விடுபடுகிருன். இயற்கையிலிருந்து படிப்படியாக டினி தன் விடுதலே பெற்று, விஞ்ஞான அறிவின், விஞ்ஞானத் தின் பயனே உணரும்போதுதர்ன் மனிதன் வளரு கிருன். ಸ್ತ್ರ சமுதாயத்தின் வளர்ச்சி தொடர் கிறது. இதை மார்க்ஸ் ஒரிடத்தில் உதாரணத் துடன் விளக்குகிருர். ஜெர்மன் நாட்டு விவசாயிகள் தமது விடுதலைக்காகக் குரல் கொடுத்துக்கொண்டு இருந்தனர். அப்போது மார்க்ஸ் சொன்னர், 'இந்த விடுதலை, விடுதலை எனும் குரல் மட்டும் விடுதலையைக் கொண்டு வராது. நீராவியின் உபயோகமும் அதைத் ić,