பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயுதங்கள் அனைத்துமே அந்தக் கூட்டத்திற்கே சொந்தமாக இருந்தது. இந்தக் கருவிகளைப் பயன் படுத்தியே அந்தக் கூட்ட்த்திற்குத் தேவையான பொருள்களை மனிதன் பெற்றுக் கொண்டான். என்றைக்கு மனிதன் கருவிகளை உபயோகிக்கத் தெரிந்து கொண்டானே, அன்றையிலிருந்தே கருவி க்ள் வளர்ச்சியடையவும் தொடங்கி விட்டன. கிடைக்கும் கற்களின் அமைப்பு, அனுபவத்தினல் கிடைக்கும் அறிவு, ஆகிய இவை கருவிகளின் நுட் பத்தை வளர்த்தன. இந்த மனிதர்கள் ஒரு இடத்தி லிருந்து மற்ருெரு இடத்திற்கு போகும்போது இன் னும் அந்தக் கருவிகள் வளர்ச்சியடைந்தன. அந்தந்த இடங்களுக்குத் தகுந்தாற்போல கருவி களின் அமைப்பும் விரிவடைந்தன. இந்தக் கருவிகளின் அடிப்படையில் கற் காலத்தை மூன்று விதமாகப் பிரிக்கலாம்: பழங்கற் காலம், இடைக்கற்காலம், புதுக்கற்காலம் என்பவை sojóð6li. இவ்வாருக மனிதன் மிக நீண்ட காலமாக கற். கருவிகளே உபயோகித்து வாழ்ந்திருக்கிருன், இதனை சுமார் 20 லட்சம் வருடங்களாகக் கணக்கிட்டிருக் கிருர்கள் (இதில் கருத்து வேறுபாடுகள் உண்டு). வாழ்க்கையில் மனிதனுக்கு தேவைகள் அதிகமாகிக் கொண்டே வரும். ஜனத்தொகையும் அதிகமாகிக் கொண்டே வரும். ஜனத்தொகை அதிகமாக வேண்டியது அவர்களுக்கு அத்தியாவசிய தேவை யாகும். ஏனெனில் வேட்டைச் சமுதாயத்தால் உயிர்ச்சேதம் மிக அதிகம். ஒரு கூட்டமாக மனிதர் கள் வேட்டைக்குச் செல்வார்கள். திரும்பும்போது கூட்டத்தின் ஒரு பகுதிதான், மிருகங்களிடமிருந்து தப்பி உயிரோடு வர முடியும். எனவே ஜனத் தொகை அதிகரிப்பு என்பது அந்தக் காலத்தில் 2#.