பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றே அவர்களுடைய வாழ்க்கைக்கு அடிப்படை யாக இருந்தது. ஆரம்பத்தில் வேட்டையாடி உயிர் வாழ்ந்த மனிதன் விவசாய அறிவு பெறும்போது கால்நடை களையும் வளர்க்கத் தொடங்கினன். கால்நடைகளை வளர்த்து விவசாயத்திற்குப் பயன்படுத்துவதும், உணவாக்கிக் கொள்வதும் விரிவடைந்தது. கால் நடைகளே மனிதன் பயன்படுத்தத் தொடங்கியது மனித சமுதாய வரலாற்றில் மற்றுமொரு புரட்சி கரமான முன்னேற்றமாகும். இரும்பினல் ஏற்பட்ட முன்னேற்றத்திற்குப் பிறகு கால்நடைகளை வசக்கிப் பயன்படுத்தத் தொடங்கியது மற்றுமொரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இதல்ை ஒரு நிலைத்த வாழ்க்கையை மனிதன் ப்ெற்ருன். ஆடும்ாடுகளே வளர்க்க, பராமரிக்க, பயன்படுத்த-நீர்வசதி, மேய்ச்சல் வசதி, விவசாய வசதி உள்ள இடங்களில் நிலையாக மனிதன் வாழத் தொடங்கினன். இதனல் நாடோடியாக வாழ்ந்த, வேட்டைத் தொழில் செய்து வந்த மனிதனின் வாழ்க்கையில் மாறுபாடு ஏற்பட்டது. இந்த வாழ்க்கையில் தனக்கு வேண்டிய உணவுக்காக மட்டுமல்லாமல், தனது கால்நடை களுக்கு வேண்டிய தீவனத்திற்காகவும் மனிதன் விவ சாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தனது உழைப்புச் சக்தியை மட்டுமின்றி, கால்நடைகளின் உழைப்புச் சக்தியையும் மனிதன் பயன்படுத்தினன். விவசாயம் பரவலாக்கப்பட்டு, விவசாய வேலைகள் விரைந்து முன்னேறின. இவ்வகையிலான மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே, மற்ருெரு இனமும் வாழ்க் கி ஒரு கூட்டம் பயன்படுத்தும் கருவிகளும். வர் முறையும், மற்ருெரு கூட்டத்தின் கருவிகளு 23.