பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உற்பத்திக் கருவிகளில் ஒன்ருகத்தான் அடிமையும் இருந்தான் க்ருவிகள் பேசாது, அடிமை பேசுவான். இதுதான் வேறுபாடு. அடிமைகளைப் பற்றி அரிஸ் ட்ாடில் எனும் கிரேக்க ஞானி அடிமை ஒரு பேசும் கருவி' என்ருர். அடிமை முறையில் இருந்த கவ்னிக்க வேண்டிய அம்சம் என்னவென்ருல் அடிமைகள் உழைக்க வேண்டும். அடிமைச் சொந்தக் காரர்கள் உழைக்க வேண்டியதில்லை. சமுதாய அமைப்பில், ஒரு பிரிவின் உடலுழைப்பை மற்ருெரு பிரிவு சுரண்டும் முதல் வர்க்கப்பிரிவு இங்குதான் தொடங்குகிறது. அடிமை முறையில் தோன்றிய வர்க்கப் பிரிவினையிலிருந்து, சோஷலிச அமைப்பு ஏற்படும்வரை இடையில் உள்ள எல்லா சமுதாய அமைப்பிலும் வர்க்கப் பிரிவினையும், சுரண்டலும் பல வேறுபட்ட வடிவங்களில் இருந்துவந்திருக்கிறது. அடிமைமுறைச் சமுதாயத்தில் உள்ள வர்க்கங் களுக்கிடையில் உள்ள் தொடர்பைக் கொண்டு தான். அந்தச் சமுதாயத்தின் உற்பத்தி உறவுகளை அல்லது சமுதாய உறவுகளைப் புரிந்து கொள்ள முடியும். அடிமைச் சமுதாயத்தில் அடிமைகளும், அடிமைச் சொந்தக்காரர்களும் என்ற இரு வர்க்கங் கள் இருந்தன. இதில் அடிமைகள் உழைப்பவர் கள். அவர்கள்தான் உற்பத்திக்குக் காரணமான வர்கள். அடிமைச் சொந்தக்காரர்கள்தான் அடிமை களுக்கு மட்டுமின்றி,_நிலங்களுக்கும் சிறுதொழில் பட்டறைகளுக்கும் சொந்தக்க்ாரர்களாக இருந் தனர். ஆனல் இம் மாதிரி நிலச் சொந்தக்காரர் கள் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பில் வருகின்ற நிலப்பிரபுக்கள் அல்லர். நிலச் சொந்தக்காரர்கள், மொத்த சமுதாயத்தினையும் ஆளுகின்ற ஆட்சிப் பொறுப்பின் ஏற்ற, அரசியலில் ஈடுபடும்போது தான் நிலப்பிரபுகள் (feudal Lords) எனப்படுகின் றனர். அடிமைச் சமுதாயத்தில் இருந்தவர்கள்