பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்புகளில் நடைபெறும் வரலாற்று மாறுதல் களைக் காண்போம். அதாவது தற்கால வர்க்கப் போராட்டங்களின்தன்மைகளே சுருக்கமாக அறிந்து கொள்ள முயலுவோம். தற்கால வர்க்கப் போராட் டம் உலகளாவிய தன்மையுடையது. எனவே அதனை மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் காண்போம். அப்பிரிவுகள் வருமாறு: 1. வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடு களில் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டங்களும். 2. தற்காலத்தில் தேசீய விடுதலை அடைந்த நாடுகளிலும், தேசீய விடுதலைக்காகப் போராடும் நாடுகளிலும் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டங் களும். 3. சோஷலிசப் புரட்சி நடைபெற்று வெற்றி பெற்ற நாடுக ளில், முதலாளித்துவத்திலிருந்து சேர்ஷலிசத்திற்கு மாறுகிற இடைநிலைக் கட்டத்தில் வர்க்கங்களின் நிலைகளும், வர்க்கப் போராட்டமும். உலகிலுள்ள பல நாடுகளிலும் சமுதாய வளர்ச்சி நிலைமைகள் வெவ்வேருக உள்ளன என்பது நமக்குத் தெரியும். அமெரிக்கா, ஜப்பான், இங்கி லாந்து, இத்தாலி, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாடுகள், தொழில் வளர்ச்சி (முதலாளித்துவம்) யடைந்த நாடுகள், இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, வளர்ச்சியடையாத புதிதாக விடுதலை யடைந்த நாடுகள். ஆப்பிரிக்காவில் உள்ள சில நாடுகள் இன்னும் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருப் பவை. சோவியத் ரஷ்யா, கிழக்கு ஜெர்மனி, போலந்து, கியூபா, வடக்கு வியத்ளும் முதலிய நாடு கள் சோஷலிச நாடுகள். ஒவ்வொரு நாடும் வளர்ச்சி நிலையிலும், வளர்ச்சி விகிதத்திலும் வேறுபட் டுள்ளன. 球操