பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொத்தம் 20கோடி உழைப்பாளிகளில் 8.5 லட்சம் தான் இயந்திரத் தொழிலாளர்கள்: 5 லட்சம் அலுவலக ஊழியர்கள். இந்தக் கணக்கிலிருந்து அவர் கள் வந்தமுடிவு இதுதான். ‘சமுதாய மாற்றத்தில் இயந்திரத் தொழிலாளி வர்க்கம்தான் முதன்மைப் பாத்திரம் உடையது என்று சொல்வது தவறு. ஏனெனில் அதன் எண் ணிக்கை, அலுவலக ஊழியர் எண்ணிக்கையைவிடக் குறைவு. ’’ இதற்கு லெனின் முன்னரே பதிலளித்துள். ளார். சமுதாயப் புரட்சியை செயல் படுத்தும் வர்க்கத்தின் பலம் எந்த அம்சங்களில் இருத்தல் வேண்டும்? . 1. எண்ணிக்கை 2.நாட்டின் பொருளாதாரத் தின் அந்த வர்க்கத்தின் பாத்திரம் 3. உழைக்கும் மக்களோடு அந்த வர்க்கத்திற்கும் நேசத் தொடர்பு கள் 4. ஸ்தாபன பலம். ஒரு நாட்டின் மொத்த ஜனத் தொகையில் அதன் விகிதத்தை விட மிக அதிகமான வலிமை இயந்திரத் தொழிலாளி வர்க்கத் திற்கு உண்டு. அலுவலக ஊழியர்கள், வர்த்தகத் தொழிலாளிகள், எலெக்ரானிக் தொழிலில் திற்மை பெற்ற தொழிலாளிகளைவிடக் குறைந்த ஊதியம் பெறுகிருர்கள். இருபகுதியினரிடையே உள்ள பொரு ளாதார நிலையிலுள்ள வேறுபாடுகள் குறைந்து வருகின்றன. அலுவலகப் பணிகள் இயந்திரமயமாகி வருவதால் வேலையின் தன்மையிலும் வேறுபாடு குறைகிறது. இவர்களில் நிர்வாகப் பொறுப்பிலுள்ள உயர் தர அதிகாரிகள், சுரண்டலுக்கு ஏஜென்டுகளாக உள்ளனர். அவர்கள் முதலாளிகளின் கருவிகளாகச் செயல்படுகின்றனர். நடுத்தர ஊழியர்களில் மேற் 47,