பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏகபோகங்களோடு தொடர்புக் கொண்டிருப்பதால், அவற்றின் நலன்களுக்கேற்பு இரட்டைச் சுரண்ட வில் ஒரு பங்குப் பெற விரும்புகிறது. இவர்கள், தேசீய முதலாளிகளுக்கு விரோதமாக இருக் கிரு.ர்கள். இந் நாடுகளில், நிலவுடைமையாளர்கள் பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறை யிலும் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளார்கள். இவர்களுள் பரம்பரை நிலப்பிரபுக்களும்,புதுப்பணக் கார-நிலவுடைமையாளர்களும் உள்ளனர். தங்க ஞடைய உரிமைகளையும், ஆதிக்கத்தையும் இவர்கள் பாதுகாத்துக் கொள்ள விரும்புகின்றனர். தேசீய விடுதலே இயக்கத்திற்கும் சமூக முன்னேற்ற இயக் கத்திற்கும் இவர்கள் விரோதமாகவே செயல்படு கின்றனர். இவர்கள் அயல்நாட்டு சுரண்டல்காரர் களோடு சேர்ந்து கொள்ளும் உள்நாட்டுப் பிற் போக்குச் சுரட்டல்காரர்கள். இவர்களுடைய துணையோடு வெளிநாட்டு ஏகாதிபத்தியம், இந் நாடுகளின் உள் நாட்டு அரசி யவில் தலையிடுகிறது. முற்போக்கு இயக்கங்களுக்கு எதிராக இவர்களுக்கு உதவி செய்து, பிற்போக்கு இயக்கங்களைத் துரண்டி விடுகிறது. இதனுல்தான் இந் நாடுகளின் வர்க்கப் போராட்டத்தின் உள் ளடக்கம், முற்போக்கு வர்க்கங்களுக்கும், ஏகாதி பத்திய-உள் நாட்டுப் பிற்போக்குக் கூட்டிற்கும் இடையே நடைபெறுகிற போராட்டமாகும்.