பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறும்பொழுது வர்க்கப் போராட்டம் வர்க்க வேறுபாடில்லாத கம்யூனிஸ்டு சமுதா யத்தை ஏற்படுத்துவதுதான் தொழிலாளி வர்க்கத் தின் குறிக்கோளாகும். வர்க்க வேறுபாடுகளை ஒழிப்பதற்கு உற்பத்தி சாதனங்களில் தனி உடைமையை அகற்ற வேண்டும். இது பற்றி, லெனின் எழுதியதாவது: வர்க்கங்களே முழுமை யாக ஒழிப்பதற்கு சுரண்டல்காரர்களைத் தோற்கடித் தால் மட்டும் போதாது. உற்பத்திச் சாதனங் களின் மீது உடைமையாளர்களுக்கு இருக்கும் உரி மைகளே ஒழித்தால் மட்டும் போதாது. உற்பத்தி சாதனங்களில் தனி உடைமையை முழுவதும் ஒழிக்க வேண்டும். நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை ஒழிக்கவேண்டும். உடல் உழைப்பாளிகளுக்கும், மூளை உழைப்பாளி களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை ஒழிக்க வேண்டும். இக் கடமைகளை நிறைவேற்ற நீண்ட காலம் ஆகும்.' இக் கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவை யான நடவடிக்கைகள் எவையென்பது சோஷலிஸ் நாடுகளின் அனுபவத்திலிருந்து தெளிவாக விளங்கு கிறது. முதலில் சுரண்டல்காரர்களின் ஆட்சியை ஒழிக்க வேண்டும். உற்பத்தி சாதனங்களில் அவர் களுடைய தனி உடைமையை அகற்றவேண்டும். இரண்டாவது சிறிய பண்ணைகளை இனத்து பெரிய கூட்டுப் பண்ணைகளே அமைக்க வேண்டும். ஒரே விதமான சோஷலிஸ்டு நிலவுடைமையை థఖీ