பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பழைமையிலிருந்து புதுமைத் தோன்ற அதுவே உந்துச்சக்தியாக உள்ளது. அழியத் தொடங் குகிற சமுதாயத்தை அழித்து வளரத் தொடங்கு கிற சமுதாயத்தை உருவாக்குகிறது. மனித இனத் தின் வரலாற்று வளர்ச்சியில் திடீர் திருப்பங்களையும், துரிதமான முன்னேற்றத்தினையும் அது ஏற்படுத்து கிறது. புரட்சி, பல ந்ாட்டு மக்களையும் செயலுக்குத் துண்டுகிறது. சமுதாயப் புரட்சிகளின் நெறிமுறை கள் நாட்டுக்கு நாடு வேறுபடும். சில வகையான புரட்சிகள் இறுதி மாறுதலுக்குத் தயாரிப்பாக அமையலாம். இவ்வகையான புரட்சிகளுக்குப் பின் முழுமையான சமுதாயப்புரட்சி தோன்றும். சமு தாயப் புரட்சிக்குமுன் புரட்சியை நடத்தும் சக்தி கள் அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டும். இதனை அரசியல் புரட்சி என்று கூறுகிருேம். ஒரு.பிற் போக்கு வர்க்கம் முற்போக்கு வர்க்கத்திடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டால் அதனே எதிர்ப்புரட்சி என்கிருேம். உதாரணமாக சிலியில் நடந்தது எதிர்ப்புரட்சி. திடீர் ஆட்சிக் கவிழ்ப்புகள் முற்போக்காகவுமிருக்கலாம், அல்லது பிற்போக் காகவுமிருக்கலாம். ஆட்சிக் கவிழ்ப்பின் பின் அரசி யல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பகுதி எந்த வர்க் கத்தின் நலன்களுக்குப் பன்னிபுரிகிறது என்பதைக் குறித்து அதனை முற்போக்கு என்ருே பிற்போக் கென்ருே கூறுகிருேம். இத்தாலியில் 1922லும், ಜ್ಞರಾಗಿ 1933 லும் பாசிஸ்ட்டுகளும் நாளிகளும் திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தியது பிற்போக்கான தாகும். ஏனெனில் அவர்கள் தங்கள் அரசியல் அதி காரத்தை மிகவும் பிற்போக்கான தேசீய ஏகபோகங் களின் நலன்களை விஸ்தரிக்கவே பயன்படுத்தினர் கள். தற்காலத்தில் திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு முறை களே முற்போக்கான ராணுவப் பகுதிகள் பயன் படுத்தி முற்போக்கு வர்க்களுக்காக அரசாங்க அதி 70